கமல் சொல்வது சரி தான்: அவர் பேச்சைக் கொஞ்சம் கேளுங்கப்பா
சென்னை: பாலிவுட் என்றாலும், அங்கு நடிக்கும் நடிகர், நடிகையர் என்றாலும் பெரிதாகப் பேசப்படுவது சரி தானா.
திரைத்துறையை கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என்று உட்களாக பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் இந்த உட்களில் பாலிவுட் என்றால் மட்டும் ஏதோ பெரிய விஷயமாகப் பேசப்படுகிறது.
பாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகையர் உயர்த்திப் பேசப்படுகிறார்கள். இந்த செயல் திரைத்துறைக்கு ஏற்றது தானா?

இளைய தளபதியுடன் பாலிவுட் நடிகை
இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க பாலிவுட்டில் இருந்து நடிகை வந்துள்ளார் என்று கூறுகிறார்கள். பாலிவுட் நடிகை என்றால் என்ன, விஜய் நடித்த படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். அவர் ஒரு பாட்டில் இரண்டு ஸ்டெப் போட்ட இந்தி படம் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் மறுபடியும் ஒரு இந்தி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட அழைத்துள்ளனர்.

சந்தானத்துடன் பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா
சந்தானம் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை கீதா பஸ்ரா நடிப்பதாகக் கூறப்படுகிறது. சந்தானத்தின் படங்களைப் பார்த்திராத அவர் நம்மூர் காமெடியனை நேரில் பார்த்த பிறகே அவருடன் நடிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வாராம்.

பாலிவுட் போக ஆசைப்படும் தென்னிந்திய நடிகைகள்
தென்னிந்திய நடிகைகளில் பலருக்கும் பாலிவுட்டுக்கு போகும் ஆசை உள்ளது. அங்கு சென்று பெரிய்ய்ய நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் அங்கு சென்று ஜொலிக்க முடியாவிட்டாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறார்கள்.

நட்சத்திரங்களில் பாகுபாடு வேண்டாமே
திரை நட்சத்திரங்களில் பாலிவுட் நட்சத்திரங்களை மட்டும் உயர்வாகப் பார்ப்பது பேசுவது வேண்டாம். எல்லா உட் நடிகர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.


Click it and Unblock the Notifications











