என்னை திட்டி, கொன்றுவிடுவேன் என்றார் அம்பரீஷ்: ரஜினி உருக்கம்

By Siva

Recommended Video

வரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்றார் அம்பரீஷ் - ரஜினி.. வீடியோ

பெங்களூர்: அடுத்த முறை வீட்டிற்கு வரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று அம்பரீஷ் ரஜினியை திட்டியுள்ளார்.

கன்னட நடிகர் அம்பரீஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெங்களூர் சென்றார் ரஜினிகாந்த். தனது நண்பன் உயிரற்று கிடந்ததை பார்த்ததும் அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

அம்பரீஷுக்கும், தனக்கும் இடையேயான நட்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அம்பரீஷ்

அம்பரீஷ்

நானும், அம்பரீஷும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தோம். அவரின் மறைவால் நான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். அனைவருக்கு சில நெருங்கிய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அம்பரீஷுக்கு சுமார் 100 நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். அவர் மரணம் அடையும் நாள் வரை ராஜா போன்று வாழ்ந்தார். அவர் சம்பாதித்தது எல்லாம் மக்களை தான்.

திட்டு

திட்டு

நான் ஒரு வாரத்திற்கு முன்பு பெங்களூருக்கு வந்திருந்தேன். நான் ஒவ்வொரு முறை பெங்களூருக்கு வரும்போதும் மதிய உணவு சாப்பிட அவர் வீட்டிற்கு செல்வேன். ஒரு வாரத்திற்கு முன்பு நான் அவருக்கு போன் செய்து அடுத்த முறை உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்றேன். அவர் தனது ஸ்டைலில் என்னை திட்டிவிட்டு அடுத்த முறை வீட்டிற்கு வரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்றார். அடுத்த முறை அவரை பார்க்கவே முடியாது என்பது எனக்கு தெரியாது என்றார் ரஜினி.

ரஜினி

ரஜினி

எஸ்.பி. முத்துராமன் இயக்கிய ப்ரியா படத்தில் ரஜினி, அம்பரீஷ் ஆகியோர் சேர்ந்து நடித்தனர். ஆனால் அந்த படத்தில் சேர்ந்து நடிப்பதற்கு முன்பில் இருந்தே அவர்களுக்கு இடையே பழக்கம் என்று கூறப்படுகிறது.

நண்பர்

நண்பர்

அம்பரீஷ் குறித்து இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் கூறியதாவது, அவர் மிகவும் மரியாதையான நபர். அனைவருக்கும் மரியாதை அளிப்பார். அவர் எம்.பி., அமைச்சாரன போதும் கூட பழைய நட்புகளை மறக்காதவர். நாம் ஒரு நல்ல நடிகர், மிக நல்ல அரசியல்வாதி, சிறந்த நண்பரை இழந்துவிட்டோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X