சிம்புவின் பத்து தல படம் எப்போது ரிலீஸ்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சிம்புவின் பத்து தல படம் எப்போது ரிலீஸ் என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

When is release Simbus Patthu Thala movie?

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் டோலிவுட் என பல்வேறு சினிமாக்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் மற்றம் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

மேலும் ஹாலிவுட் சினிமா தொடர்பான தகவல்களையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த வகையில் அண்ணாத்த படத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ள அண்ணாத்த அண்ணாத்த பாடல் குறித்த தகவல்களையும் அந்த பாடல் புரிந்துள்ள சாதனைகள் குறித்த தகவல்களையும் கூறியுள்ளார் பிகே. அண்ணாத்த படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்காக ஓபனிங் பாடலை பாடியுள்ளார் எஸ்பிபி. இது எஸ்பிபி ரஜினிக்காக கடைசியாக பாடிய பாடல் ஆகும்.

இதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் நடிக்கும் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. 61 வயது நடிகரான மோகன் லால் பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஷாஜி கைலாஷும் மோகன் லாலும் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

இதேபோல் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இந்தப் படத்தில் சந்திரஹாசன், இளவரசு, டெல்லி கணேஷ், ஷீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் கடந்த 8ஆம் தேதி சோனி லைவ் வீடியோவில் வெளியானது. இந்தப் படத்தை ஸ்டீபன் ரங்கராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் பத்து தல படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. பத்து தல படத்தை இயக்குனர் நார்தன் மற்றும் இயக்குனர் கிருஷ்ணன் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். இந்தப் படம் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தை கே இ ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இதேபோல் உடன்பிறப்பே படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. ஜோதிகாவின் 50வது படமாக உருவான இப்படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவணன் இயக்கிய இப்படம் கடந்த 14ஆம் தேதி அமேஸான் பிரைம்மில் ரிலீஸ் ஆனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X