கொளுத்தும் வெயிலில் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் காத்திருப்பதைத் தவிர்க்க ரஜினி சொன்ன யோசனை!

சென்னை: ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் வேலை என்று வந்து விட்டால் அவர் பக்கா "வேலைக்காரனாக" மாறி விடுகிறார். சாதாரண "மனிதனாக" மாறிப் போய் விடுகிறார்.

லிங்கா படப்பிடிப்பின் போது, பொது இடத்தில் ரஜினி உடை மாற்றிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. இப்படம் டிசம்பர் மாதம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், லிங்கா பட படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரிய வந்துள்ளது.

When Rajinikanth changed clothes in public

உடை மாற்ற...

அதாவது ஒரு காட்சிக்காக ரஜினி உடை மாற்ற வேண்டியிருந்தது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்திலேயே உடையை மாற்ற முடிவு செய்துள்ளார் ரஜினி.

காலதாமதம் ஆகும்...

கேரவனுக்குள் சென்று உடையை மாற்ற படக்குழுவினர் வற்புறுத்தியும் ரஜினி அதற்கு மறுத்து விட்டாராம். ‘நான் கேரவனுக்குச் சென்று உடை மாற்றி வர காலதாமதம் ஆகும். எனவே நேரத்தை மிச்சப் படுத்த நான் இங்கேயே உடையை மாற்றிக் கொள்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

கொளுத்தும் வெயிலில் மற்றவர்கள்...

மேலும், ‘நான் செய்யும் கால தாமதத்தால், ஆயிரக்கணக்கானோர் கொளுத்தும் வெயிலில் எனக்காகக் காத்திருக்க வேண்டும்' என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

லுங்கியால் மறைவிடம்...

தொடர்ந்து படக்குழுவினர் வற்புறுத்தியும் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லையாம் ரஜினி. இதையடுத்து ஒரு லுங்கியைக் கொண்டு திரை போல ஒரு மறைவிடத்தை ஏற்படுத்தி, அங்கு அவர் உடையை மாற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X