'குட்டி' நடிகரிடம் அரசியல் பேசிய ரஜினிகாந்த்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டான்ஸ் எப்படி என்று குட்டி நடிகர் ஒருவரிடம் கேட்டிருக்கிறார்.
மாஸ்டர் மகேந்திரன் பல படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது வளர்ந்து மிஸ்டர் மகேந்திரனாக ஹீரோவாகிவிட்டார். மகேந்திரன் குட்டிப் பையானாக இருக்கையில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் விழா பட நாயகன் மகேந்திரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பற்றி பேசினார்.

ரஜினி
உங்களுக்கு 8 வயதாக இருந்தாலும் சரி, 80 வயதாக இருந்தாலும் சரி ரஜினி சார் வயது வித்தியாசமின்றி ஒரே மாதிரி நடந்து கொள்வார். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.

ரஜினி ரசிகன்
நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகனாக்கும். அதனால் நான் குட்டிப் பையானாக இருந்தபோது அடிக்கடி அவரது படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு சென்றுவிடுவேன்.

முதல்வர்
நான் சிறுவன் என்றும் பாராமல் ரஜினி சார் என்னுடன் சென்னை டிராபிக், ஏன் அரசியல் பற்றி கூட பேசியிருக்கிறார். ஒரு முறை அவர் என்னிடம் முதல்வர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நான் ஓ, நல்லா இருக்கிறார் என்றேன்.

அருணாச்சலம்
அருணாச்சலம் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அப்போது பாடல் காட்சியை படமாக்கினர். அது முடிந்ததும் ரஜினி சார் என்னிடம் வந்து என் டான்ஸ் ஓகேவா என்று கேட்டார்.

சூப்பர் அங்கிள்
அங்கு அத்தனை பேர் இருந்தும் சிறுவனான என்னிடம் வந்து ரஜினி சார் கேட்டதை நினைத்து பிரமித்தேன். உடனே ஆமாம் அங்கிள் டான்ஸ் சூப்பர் என்றேன் என மகேந்திரன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











