என் ராசியான பிரேஸ்லெட்டை காணோமே: சல்மான் கான் கவலை
மும்பை: சல்மான் கான் எப்பொழுதும் அணிந்திருக்கும் ராசியான பிரேஸ்லெட் காணாமல் போய் கிடைத்துள்ளது.
நடிகர் சல்மான் கான் எப்பொழுதுமே தனது கையில் நீல நிற கல் வைத்த பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருப்பார். அந்த பிரேஸ்லெட் அவருடன் இருந்தால் அவருக்கு ராசியாம்.
அதனால் தான் மனிதர் பிரேஸ்லெட்டை பிரிவது இல்லை.

பார்ட்டி
சல்மான் கானின் பண்ணை வீட்டில் பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டிக்கு நண்பர்கள், திரை உலக பிரபலங்கள் என்று ஏராளமானோர் வந்திருந்தனர். சல்மானும் வந்தவர்களை நல்லபடியாக உபசரித்துள்ளார்.

பிரேஸ்லெட்
பார்ட்டி தீவிரத்தில் இருந்த சல்மானை பார்த்து ஒருவர் என்ன பாய் கையில் இருந்த ராசியான பிரேஸ்லெட் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது தான் தனது பிரேஸ்லெட் தொலைந்ததே சல்மானுக்கு தெரிய வந்துள்ளது.

கவலை
பிரேஸ்லெட் தொலைந்ததால் சல்மான் கோபப்படவில்லை. ஆனால் கவலை அடைந்துள்ளார். அப்பா ஆசையாய் ஆசையாய் கொடுத்த பிரேஸ்லெட் இப்படி தொலைந்துவிட்டதே என்று கவலைப்பட்டுள்ளார்.

போச்சு போச்சு
சல்மானின் பிரேஸ்லெட்டை பலரும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவே இல்லை. இதனால் தனது ராசியான பிரேஸ்லெட் இனிமே கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சல்மான்.

கிடைத்துவிட்டது
ஜெய் ஹோ படத்தில் சல்மானுடன் நடித்த அஷ்மித் பட்டேல் அந்த பிரேஸ்லெட்டை தேடியபோது அது நீச்சல் குளத்திற்கு அடியில் இருந்ததை பார்த்து எடுத்து வந்து கொடுத்தார்.

குஷியோ குஷி
அஷ்மித் தனது பிரேஸ்லெட்டை கொண்டு வந்து கொடுத்தவுடன் தான் சல்மான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். எங்கே இருந்து கண்டுபிடித்தீர்கள் என்று அஷ்மித்திடம் கேட்ட சல்மான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











