»   »  சிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் பையனாக வேலை செய்த சிவகார்த்திகேயன்

சிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் பையனாக வேலை செய்த சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவுடன் சேர்ந்து பணியாற்றியது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன். நடிப்பது தவிர படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.

பெரிய திரைக்கு வர விரும்பும் சின்னத்திரை பிரபலங்கள் சிவகார்த்திகேயனை ரோல் மாடலாக வைத்துள்ளனர்.

வேட்டை மன்னன்

வேட்டை மன்னன்

நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் அவருக்கு வேட்டை மன்னன் பட வாய்ப்பு கிடைத்தது.

துணை இயக்குனர்

துணை இயக்குனர்

வேட்டை மன்னன் படத்தில் சிவகார்த்திகேயன் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் அந்த படத்தின் சில காட்சிகளிலும் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு சிம்பு பேச வேண்டிய வசனங்களை அவரிடம் காண்பிக்கும் வேலையை செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

டிராப்

டிராப்

பல காரணங்களால் வேட்டை மன்னன் படம் கைவிடப்பட்டது. தன் படம் ரிலீஸாகும்போது எல்லாம் சிம்பு தனக்கு போன் செய்து தனது கருத்தை தெரிவிப்பார் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

நெல்சன் தற்போது நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அனிருத் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லையாம்.

English summary
Sivakarthikeyan acted in Simbu's Vettai Mannan apart from working as an assistant to director Nelson. Sivakarthikeyan is in good terms with Simbu right from Vettai Mannan days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X