பெயரும், பணமும் வேண்டாம், சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: விஜய் தேவரகொண்டா பகீர்

By Siva

ஹைதராபாத்: திரையுலகை விட்டு விலக முடிவு செய்ததாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவிகளின் மனதை கவர்ந்துவிட்டார் விஜய்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது,

அம்மா

அம்மா

நோட்டா படம் ரிலீஸான சமயம் அது. என் அம்மாவின் உடல்நலம் மோசமாக இருந்தது. அவரை பார்க்க நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது சினிமாவை விட்டு விலகுவது என்று மனதளவில் தயாராகிவிட்டேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை. எதையும் யோசிக்கவும் முடியவில்லை.

புகழ்

புகழ்

எனக்கு இந்த பணம், புகழ் எல்லாம் வேண்டாம் என்று நினைத்து தயாரிப்பாளரை அழைத்து பணத்தை திருப்பிக் கொடுத்தேன். மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அனைத்தையும் கொடுத்துவிட்டேன். மருத்துவமனைக்கு சென்றபோது என் அம்மாவின் உடல்நலம் தேறியிருந்ததை பார்த்து நிம்மதியாக இருந்தது.

நடிப்பு

நடிப்பு

சினிமா மீது உள்ள அன்பால் மீண்டும் நடிக்க வந்தேன். ஒரு நடிகராக என் வாழ்க்கை ரொம்ப ஜாலியானது என்று அனைவரும் நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. என் கெரியரில் பல போராட்டங்கள் இருப்பதை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனக்கு நடிப்பு மிகவும் பிடிக்கும். அதனால் பிரச்சனைகளை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு நடிகராக என் கெரியர் மிகவும் கடினமானது என்றார் விஜய்.

விஜய்

விஜய்

விஜய் தேவரகொண்டா நடித்த டாக்சிவாலா தெலுங்கு படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர். படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே அதை இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X