விமானத்தில் 'கடவுளை' பார்த்த சீயான் விக்ரம்: ஆனால்...

By Siva

சென்னை: விமானத்தில் தான் சச்சின் டெண்டுல்கரை பார்த்தபோது நடந்த சம்பவம் குறித்து கவலையுடன் தெரிவித்துள்ளார் விக்ரம்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படம் பொங்கலுக்கு ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு விக்ரம் பேட்டியளித்தார்.

அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,

விமானம்

விமானம்

நான் மும்பையில் இருந்து சென்னை வர விமானத்தில் ஏறினேன். என் பக்கத்தில் இருந்த இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

சச்சினை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம். ஓ மை காட் என்று மனதிற்குள் சொன்னேன். அவர் என்னை பார்த்து ஹாய் என்று சொன்னார். அவருக்கு நான் யார் என்பது தெரியவில்லை.

பரவாயில்லை

பரவாயில்லை

சச்சினுக்கு என்னை அடையாளம் தெரியாததால் வருத்தமாக இருந்தது. என்னை அடையாளம் தெரியாதது குறித்து சச்சினிடம் கேட்டேன். அதற்கு அவரோ நான் இந்திய படங்களை பார்ப்பது இல்லை. வெளிநாட்டு படங்களை எப்பொழுதாவது பார்ப்பேன் என்றார்.

மகன்கள்

மகன்கள்

நான் சச்சினுடன் இரண்டு மணிநேரம் விமானத்தில் பயணம் செய்தேன். பெரும்பாலும் எங்களின் மகன்கள் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம் என்று விக்ரம் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X