திருமணம்: விஷால், ஆர்யாவின் 'பாச சேட்டை'யை பார்த்தீர்களா?
சென்னை: விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்ற கேள்விக்கு தற்போதைக்கு பதில் கிடைக்காது போன்று.
நடிப்பு தவிர தயாரிப்பிலும் குதித்துள்ளனர் நண்பர்களான ஆர்யாவும், விஷாலும். ஆர்யாவை தேடி வரும் இயக்குனர்கள் கூறும் கதை தன்னை விட விஷாலுக்கு பொருந்தும் என்று அவருக்கு தோன்றினால் உடனே அவர் விஷாலுக்கு அந்த கதையை தெரிவிக்குமாறு கூறுகிறார்.
விஷாலும் ஆர்யாவுக்கு பொருந்தும் கதைகள் தன்னை தேடி வந்தால் ஆர்யாவை கையைக் காட்டிவிடுகிறார்.

நல்லது
விஷாலும், ஆர்யாவும் ஒருவருக்கொருவர் புரிந்து வைத்துக் கொண்டு போட்டி பொறாமை இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

பிக்கப் டிராப்
ஆர்யாவுக்கு வீட்டில் பெண் தேடுவதாகவும் அவரின் பிக்கப் டிராப் விஷயத்தால் பெண் கிடைக்க மாட்டேன் என்கிறது என்றும் செய்திகள் வெளியாகின.

ஆர்யா
ஆர்யாவிடம் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்று கேட்டால் என் நண்பன் விஷாலுக்கு திருமணம் முடிந்த பிறகு என்கிறார்.

விஷால்
விஷாலிடம் ஆர்யா இப்படி கூறுகிறாரே நீங்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டால் முதலில் ஆர்யாவுக்கு முடியட்டும் என்கிறார்.

பெற்றோர்
திருமணம் செய்து கொள்ளுமாறு விஷாலை அவரது பெற்றோர் வலியறுத்தியும் ஆர்யாவுக்கு திருமணம் ஆன பிறகே நான் மணமேடை ஏறுவேன் என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம் விஷால்.

வயது
விஷாலுக்கு 36ம், ஆர்யாவுக்கு 33 வயதும் ஆகிறது. அதனால் தான் அவர்களை பார்த்து உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











