விஜய்க்கு ஏற்ற ஜோடி த்ரிஷாவா, காஜலா?

By Siva

சென்னை: நடிகர் விஜய்க்கு ஏற்ற ஜோடி என்றால் நம் நினைவுக்கு வருபவர்கள் சங்கவி, ஷாலினி, த்ரிஷா, அசின் மற்றும் காஜல் அகர்வால்.

நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் இருந்து தற்போது வரை அவருக்கு ஏற்ற ஜோடி யார் என்று பார்க்கலாம்.

விஜய்க்கு ஏற்ற சங்கவி, ஷாலினி

விஜய்க்கு ஏற்ற சங்கவி, ஷாலினி

ஆரம்ப காலத்தில் விஜய் நடித்த ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சங்கவி. விஜய்க்கு ஏற்ற ஜோடி சங்கவி தான் என்று அப்போது ரசிகர்கள் நினைத்தனர். அதன் பின் காதலுக்கு மரியாதையைப் பார்த்தவர்கள் ஜோடின்னா அது விஜய்-ஷாலினி தான் என்றனர்.

டான்ஸ்னா விஜய்-சிம்ரன் தான்

டான்ஸ்னா விஜய்-சிம்ரன் தான்

ஒன்ஸ்மோரில் சேர்ந்த விஜய்-சிம்ரன் கூட்டணி துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தது. இந்த வெற்றிக் கூட்டணி பிரியமானவளே படத்திலும் தொடர்ந்தது. விஜய், சிம்ரன் சேர்ந்து ஆடினால் அது டான்ஸ் என்று பேசப்பட்டது.

த்ரிஷாவுடன் ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி

த்ரிஷாவுடன் ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி

கில்லியில் சேர்ந்த விஜய்-த்ரிஷா ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் மீண்டும் இதே ஜோடி திரையில் கலக்கியது.

த்ரிஷா அவுட் அசின் இன்

த்ரிஷா அவுட் அசின் இன்

த்ரிஷாவை அடுத்து விஜய்க்கு ஏற்ற ஜோடியாக அசின் வந்தார். சிவகாசியில் துவங்கிய அவர்கள் கூட்டணி போக்கிரி மற்றும் காவலன் ஆகிய வெற்றிப் படங்களிலும் தொடர்ந்தது. விஜய், அசின் சேர்ந்த படங்கள் எல்லாம் ஹிட்.

லேட்டஸ்ட் ஜோடி காஜல்

லேட்டஸ்ட் ஜோடி காஜல்

ஜோதிகா, ஜெனிலியா, தமன்னா, அனுஷ்கா, இலியானாவுடன் விஜய் நடித்தார். ஆனால் லேட்டஸ்டாக ரிலீஸான துப்பாக்கியைப் பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு காஜல் அகர்வால் நல்ல ஜோடியாகத் தெரிகிறாரே என்று பேசத் துவங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X