காதல் நாயகன் கமலின் சரியான ஜோடி யார்?

By Mayura Akilan

கமல்ஹாசன்... 60 வயதை எட்டிப்பிடிக்கும் நிலையிலும் சினிமாவில் காதல் நாயகனாக உலா வருகிறார். இன்றைய காலகட்டத்தில் அவருக்கு ஏற்ற சரியான ஜோடி அமையவில்லை என்பது அவரது ரசிகர்களின் மனக்குறை.

80, 90 களில் கமல் படங்களைப் பார்ப்பதற்காக தனி ரசிகர் கூட்டமே இருந்தது. காதல் இழையோடிய கதைகள். அதற்கேற்ப காட்சிகளும் சற்று அதிகமாகவே இருக்கும்.

கமல் என்றால் முத்தக்காட்சிகள் இல்லாமலா? ஊடகங்களில் அதைப்பற்றிய செய்திகளும் அதிகம் அடிபடும். கமலுடன் காதல் செய்த நடிகைகளில் யார் சரியான ஜோடி என்று ரசிகர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

கமல் ஸ்ரீதேவி

கமல் ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் கமலுக்கு ஏற்ற சரியான பொருத்தம் என்றால் ஸ்ரீதேவிதான் என்கின்றனர் ரசிகர்கள். இருவரும் இணைந்து 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றனர்.

கமல் ஸ்ரீப்ரியா

கமல் ஸ்ரீப்ரியா

ஸ்ரீதேவிக்கு அடுத்த படியாக ஸ்ரீப்ரியா உடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார் கமல் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.

கமல் ஜெயசித்ரா

கமல் ஜெயசித்ரா

ஜெயசித்ரா உடன் நடிக்கும் போது ஒல்லியான கமல்.... அந்த கதைக்கு ஏற்ற கெட் அப்பில் அந்த ஜோடியை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கமல் – ஜெயப்பிரதா

கமல் – ஜெயப்பிரதா

நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி என ஜோடி சேர்ந்த இந்த ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.

கமல் மாதவி

கமல் மாதவி

மாதவியுடன் கமல் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் காதல் காட்சிகளில் கூடுதல் நெருக்கம் இருக்கும்.

கமல் அம்பிகா

கமல் அம்பிகா

80களில் அம்பிகா உடன் இணைந்த கமல் காக்கிக் சட்டை, விக்ரம் போன்ற பல படங்களில் கூடுதல் ரொமான்ஸ் உடன் நடித்திருப்பார்.

கமல் ராதா

கமல் ராதா

அம்பிகாவின் சகோதரி ராதாவும் அக்காவிற்கு போட்டியாக கமலுடன் காதல் பரிசு போன்ற படங்களில் காதலித்திருப்பார்.

கமல் ரேவதி

கமல் ரேவதி

சின்னப் பெண்ணாய் இருந்தாலும் கமலுக்கு இணையாக நடனமாடி அசத்துவார் ரேவதி. ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட படங்கள்.

கமல் ராதிகா

கமல் ராதிகா

ராதிகா உடன் சிப்பிக்குள் முத்து படத்தில் முதன் முறையாக ஜோடி சேர்ந்தார் கமல். தொடர்ந்து நடித்த படங்கள் ஹிட் ஜோடி என்று பேசும் அளவிற்கு ரசிகர்கள் ரசித்தனர்.

கமல் கவுதமி

கமல் கவுதமி

தேவர் மகன் படத்தில் கமல் கவுதமி இடையேயான கெமிஸ்ட்ரி செம சூப்பர் என்று பேசினர் ரசிகர்கள்.

கமல் குஷ்பு

கமல் குஷ்பு

சிங்கார வேலனில் குஷ்புவை ஓவராக சீண்டிய கமல் மைக்கேல் மதன காமராஜனில் ஜோடி சேர்ந்தார். சில படங்களுக்குப் பின்னர் குஷ்பு உடன் இணையவில்லை கமல்.

கமல் சிம்ரன்

கமல் சிம்ரன்

சிம்ரனுடன் இரண்டு படங்களில் நடித்த கமல் அதீத நெருக்கம் காட்டியதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக் கொண்டது. பம்மல் கே.சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் கமலுடன் ஒப்பிடுகையில் சின்னப் பெண்ணாய் தெரிவார் சிம்ரன்.

கமல் ஜோதிகா

கமல் ஜோதிகா

தெனாலியில் ஜோதிகா உடன் ஜோடி சேர்ந்தார் கமல். அந்த ஜோடி பின்னர் வேட்டையாடு விளையாடு படத்தில் தொடர்ந்தது. தெனாலியை விட பிந்தைய படத்தில் கமல் - ஜோதிகா இடையேயான பொருத்தம் சரியாக இருந்ததாக கூறினர் ரசிகர்கள்.

கமல் சினேகா

கமல் சினேகா

வசூல் ராஜாவில் கமல் ஜோடி சினேகா. ஓகே மோசமில்லை என்கிற அளவிற்கு பேசினர் ரசிகர்கள்.

எந்த ஜோடியும் செட் ஆகவில்லை…

எந்த ஜோடியும் செட் ஆகவில்லை…

தசாவதாரம் படத்தில் பத்து கெட் அப்பில் நடித்த கமல், அசின், ஜெயப்பிரதா, என ஜோடி சேர்ந்திருப்பார். அதன்பின்னர் மன்மதன் அம்பு, விஸ்வரூபம் போன்ற படங்களில் சரியான ஜோடி அமையவில்லை என்பதுதான் ரசிகர்களின் வருத்தம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X