தளபதி 69.. போட்டிபோடும் இயக்குனர்கள்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?
சென்னை: தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என்று போட்டா போட்டியே நடந்து வரும் நிலையில், விஜய் வேறு ஒரு திட்டத்தை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாரிசு படம் வெளியானது. குடும்ப கதை அம்சத்தைக் கொண்ட அந்த கதையில் சரத்குமார், ஷாம், ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

வம்சி பைட்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியான இந்த படத்தில், விஜய் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், விஜய்க்கு இனிமேல் பேமிலி செண்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகாது என்று ரசிகர்கள் புலம்பி வந்தார்கள்.
வாரிசு மற்றும் லியோ: வாரிசு படத்தைத் தொடர்ந்து ஆயுதபூஜைக்கு லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என்கிற இரண்டு விதமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பற்றி கடும் விமர்சனம் எழுந்த போதும், படம் வசூலை அள்ளியதாக படக்குழு அறிவித்து, சக்சஸ் மீட் வைத்து படக்குழுவினரை பாராட்டினார்கள்.
தளபதி 68: லியோ படத்தை முடித்தக் கையோடு விஜய் வெங்கட்பிரபுவுடன் இணைந்து தளபதி 68 என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்பா, மகன் என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் தலைப்பு குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.
போட்டிபோடும் இயக்குநர்கள்: விஜய் தளபதி 68 படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க போவதாகவும், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விஜய் நடிக இருப்பதாகவும், விஜய்யின் ஆஸ்தான இயக்குநர் அட்லீயின் படத்தில் நடிக்கப்போவதாகவும் இணையத்தில் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஜிகர்தண்டா 2 என்ற வெற்றிப்படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜிடம் விஜய் கதை கேட்டு ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் இயக்கப்போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
விஜய்யின் மாஸ்டர் பிளான்: இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டுள்ள வீடியோவில், தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், விஜய் தளபதி 68படத்தை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அந்த கேப்பில் தான் மக்கள் பணி மற்றும் அரசியல் பணியை செய்ய இருக்கிறார். எனவே 2026 தேர்தல் முடிந்த பின்னரே அடுத்த படத்தின் இயக்குனர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசியல் முடிவு: மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்ட போது, விஜய் மக்கள் இயக்கத்தினர், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு படகு மூலம் சென்று உதவிகளை செய்தனர். இதுமட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல நல திட்ட உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்யின் அரசியல் வருகை சரியானதாக இருக்கும் என்று அவரது ரசிகள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











