த்ரிஷ்யம் ரீமேக்.. கமல் ஜோடி நதியாவா... சிம்ரனா?
த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நதியாவைப் பரிசீலித்து வருகின்றனர். சிம்ரனிடமும் இதுகுறித்து பேச்சு நடந்து வருகிறது.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 'திரிஷ்யம்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது. இப்படத்தை ஒரே நேரத்கில் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கமல்
தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசும் நடிக்கின்றனர். இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பார் என தெரிகிறது.

வேணாம் மீனா
மலையாளத்தில் நடித்த மீனாவையே தமிழிலும் கமல் ஜோடியாக நடிக்க வைக்க பரிசீலித்தனர். இருவரும் ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் கமல் விரும்பாததால் மீனா இடம்பெறவில்லை.

நதியா
பிறகு நதியா பெயர் பரிசீலிக்கப்பட்டது. கமலும் நதியாவும் இதுவரை எந்தப் படத்திலும் இணையவில்லை. நதியா புகழின் உச்சத்தில் இருந்த போது கமல் ஜோடியாக நடிக்கக் கேட்டனர். ஆனால் கமலின் 'லிப்லாக்குக்கு' பயந்து அந்த வாய்ப்பை மறுத்தது நினைவிருக்கலாம்.

சிம்ரன்
இன்னொரு பக்கம் சிம்ரன் பெயரும் அடிபடுகிறது. கமலும், சிம்ரனும் ‘பம்மல் கே சம்பந்தம்', ‘பஞ்சதந்திரம்' படங்களில் இணைந்து நடித்தவர்கள். ஏக கிசுகிசுக்களில் சிக்கியவர்கள் என்பதும் நினைவிருக்கலாம்.

இன்னொரு ரவுண்டு...
இப்போது திருமணமாகி குழந்தை குட்டியென்று செட்டிலான பிறகு, கமலுடன் நடித்து இன்னொரு ரவுண்ட் வர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











