யாரு ரியல் கெத்து?.. மோதிப் பார்க்க ரெடியான 3 காமெடி நடிகர்கள்.. பாக்ஸ் ஆபீஸ் வெற்றி யாருக்கு?

By Staff

சென்னை: இந்த வாரம் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்த அம்பி படம் வெளியானது. ஆனால், ஒட்டுமொத்தமாக 9 படங்களுடன் போட்டியிட்ட நிலையில், மிக மிக குறைவான தியேட்டர்களிலேயே அந்த படம் வெளியானது. மேலும், ரசிகர்களை பெரிதாக படம் கவரவில்லை. ஆனால், அடுத்த வாரம் தான் தமிழ் சினிமாவின் 3 காமெடி நடிகர்களுக்கு இடையே மகாபாரத போரே நடக்கப் போகிறது.

இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என பல நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், வசூலில் யார் டாப் என்பதும் நடிகர்களின் டாப் லிஸ்டிங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Santhanam Soori and Yogi Babu movies release on a same date

அதே போல அடுத்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில், யோகி பாபு, சந்தானம் மற்றும் சூரி என 3 காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறிய நிலையில் ஒரே நாளில் கிளாஷை எதிர்கொள்கின்றனர். இதில், யாருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கிடைக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஜோரா கைய தட்டுங்க: வாமா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' படத்தில் மேஜிக் கலைஞராக யோகி பாபு நடித்துள்ளார். அந்த படம் அடுத்த வாரம் மே 16ம் தேதி திரைக்கு வருகிறது. லொள்ளு சபாவில் சந்தானம் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த போது சைடு காமெடியனாக நடித்த யோகி பாபு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக தற்போது வலம் வருகிறார். மேலும், அடிக்கடி ஹீரோவாகவும் காமெடி படங்களில் கலக்கி வருகிறார். ஜோரா கைய தட்டுங்க படம் யோகி பாபுவுக்கு எந்தளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

சூரியின் மாமன்: நகைச்சுவை நடிகராக இருந்த சூரி வெற்றிமாறன் கை வண்ணத்தால் ஒரேயடியாக நடிப்பின் நாயகனாகவே மாறிவிட்டார். விடுதலை, விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் படங்களை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்துள்ள மாமன் திரைப்படமும் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். ஸ்வாசிகா சகோதரியாக நடித்துள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை, மெய்யழகன் படங்களை போல ஃபீல் குட் சென்டிமென்ட் படமாக மாமன் இருக்கும் என தெரிகிறது. கொட்டுக்காளி பெரிதாக கல்லா கட்டாத நிலையில், மாமன் திரைப்படம் சூரிக்கு வசூல் வேட்டையை கிராமப்புறங்களில் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்: ஆர்யா தயாரிப்பில் சந்தானம், கெளதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கீதிகா, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்தர், மாறன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். நகர வாசிகள் மத்தியில் இந்த படம் கனெக்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, டிடி ரிட்டர்ன்ஸ் படங்கள் ஹிட் அடித்த நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரு ரியல் கெத்து?: திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ 3 காமெடி நடிகர்கள் ஒரே நாளில் அடுத்த வாரம் மோதவுள்ளனர். இதில், யாரு ரியல் கெத்து என்றும் பாக்ஸ் ஆபீஸில் யாரு மாஸ் காட்டப் போகின்றனர் என்பதும் அடுத்த வாரம் மே 17ம் தேதிக்கு மேல் தெரிந்துவிடும். சந்தானம் மற்றும் சூரிக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X