'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்!
நடிகர் அஜித்தை போலவே நடிகர் ஜெய்யும் பட புரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை.
Recommended Video

சென்னை: பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என நடிகர் ஜெய் கொள்கை வைத்துள்ளதாக, ஜருகண்டி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் நிதின் சத்யா கூறியுள்ளார்.
சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நிதின் சத்யா, ஜருகண்டி படத்தை தயாரித்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியுள்ள இந்த படத்தின் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியிடப்படாத நிலையில், பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் நிதின் சத்யா, நிகழ்ச்சியில் நடிகர் ஜெய் கலந்துகொள்ளாதது ஏன் என விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " நடிகர் ஜெய் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பிறகு தான் அவர் புறப்படுவார்.
படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது அவரது விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும்.
ஜெய் எனது நண்பர் தான். அதனால் அவரை அழைத்தால் பட புரோமோஷனுக்கு வரலாம். ஆனால் அவரை அழைக்க வேண்டுமா என யோசிக்கிறேன்.
பத்திரிகையாளர்களை சந்திக்க அவருக்கு என்ன தயக்கம் என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை ஏதாவது பிரச்சினை இருக்கலாம். அது எனக்கு தெரியாது.
ஆனால் அவர் முன்பு போல் இல்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குள் நான்கு படங்களில் நடித்துவிட்டார்".
இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











