அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு இதுதான் காரணம்... உண்மையை சொன்ன இயக்குனர் பேரரசு!

சென்னை: தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக உள்ளார் நடிகர் அஜித்குமார்

மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் ரசிகர்கள் மன்றத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே கலைத்த அஜித் அதன் காரணத்தை பேரரசிடம் கூறியுள்ளார்

 ஹெச் வினோத் கூட்டணி

ஹெச் வினோத் கூட்டணி

தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் பணியாற்றிக் கொண்டிருந்த அஜித் தனக்கு எந்த இயக்குனரிடமும் மிகவும் கம்பர்டபளாக இருக்கிறதோ அவரிடம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வந்தார் அந்த வரிசையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இப்பொழுது இணைந்துள்ளார் இயக்குனர் ஹெச் வினோத். நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் அஜித் ஹெச் வினோத் கூட்டணி இணைந்தது.

வலிமை

வலிமை

நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் பெண்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்துத்தரப்பு ரசிகர்கள் இடத்திலும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து ஹெச் வினோத் அஜித் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் வலிமை. பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை வெளியாகி சக்கை போடு போட்டது.

 ரசிகர் மன்றத்தை கலைத்தேன்

ரசிகர் மன்றத்தை கலைத்தேன்

அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளது. பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்களது ரசிகர்கள் மன்றத்தை நாளுக்கு நாள் பல படுத்திக் கொண்டே செல்வார்கள் . நடிகர்களின் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகும். ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அஜித் தனக்கு ரசிகர்கள் மன்றமே வேண்டாம் என்று சில வருடங்களுக்கு முன்பு ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது

 ரசிகர்களை திசை திருப்ப விரும்பவில்லை

ரசிகர்களை திசை திருப்ப விரும்பவில்லை

அதாவது திருப்பதி படத்தில் அஜித் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அப்படத்தின் இயக்குனர் பேரரசுவிடம் ஏன் ரசிகர் மன்றத்தை கலைத்தேன் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். நான் ஒரு நடிகன் என்னை பிடித்தால் நான் நடிக்கும் படங்களை வந்து திரையரங்கில் பார்க்கட்டும் கொண்டாடட்டும் ஆனால் ரசிகர்கள் மன்றம் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையையும் நேரத்தையும் நான் வீணடிக்க விரும்பவில்லை.

 அனைவரின் வாழ்க்கை முக்கியம்

அனைவரின் வாழ்க்கை முக்கியம்

ரசிகர்களை திசை திருப்ப விரும்பவில்லை. ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பினால் அவர்களது சொந்த வேலைகளையும் வாழ்க்கை இலட்சியத்தையும் விட்டு விட்டு எனக்காக நேரத்தை செலவிடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ரசிகர்களின் வாழ்க்கை ரொம்பவும் முக்கியம் எனவேதான் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டேன் என்று அஜித் கூறியதாக பேரரசு இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.ரசிகர்களை திசை திருப்ப விரும்பவில்லை. ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பினால் அவர்களது சொந்த வேலைகளையும் வாழ்க்கை இலட்சியத்தையும் விட்டு விட்டு எனக்காக நேரத்தை செலவிடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ரசிகர்களின் வாழ்க்கை ரொம்பவும் முக்கியம் எனவேதான் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டேன் அஜித் கூறியதாக பேரரசு இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X