சிவகார்த்திகேயனே வேண்டாம் என்று ஒதுக்கிய முன்னணி நடிகர்!
சென்னை: அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இப்பொழுது டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்
கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது
இந்த நிலையில் தனுஷ் சிவகார்த்திகேயன் ஓரிரு படங்களிலேயே தங்களது நட்பை முறித்துக் கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

வசூல் சாதனை
நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் ஹீரோவாக மட்டுமல்லாமல் காமெடியிலும் கலக்கும் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து தரப்பு வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வசூலை குவித்து வருகிறது அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் நீண்ட காத்திருப்புக்கு பிறகு திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. டாக்டர் வசூலை மிஞ்சும் அளவிற்கு அடுத்ததாக கல்லூரி மாணவனாக டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி காலத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூரி,பால சரவணன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என பலர் நடித்து வருகின்றனர். டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

தனுஷ் ஹீரோவாக்கினார்
தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக இருந்த சிவகார்த்திகேயன் தனுஷ் தயாரித்து நடித்த 3 திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருப்பார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் பாடல்கள் இசை அமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 3 தொடர்ந்து எதிர்நீச்சல் என்ற படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருப்பார். காமெடியனாக இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த எதிர்நீச்சல் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த தனுஷ் தன்னுடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயனை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க தயாராகிக் கொண்டிருந்தார். தான் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் நான் என்ன சொன்னாலும் செய்வார் என்று எண்ணத்தில் இருந்த தனுஷிற்கு அது பொய்த்துப் போனது.
Recommended Video

சிவகார்த்திகேயன் கேட்கவில்லை
சிவகார்த்திகேயன் தன்னுடைய ரூட்டு வேறு என தனுஷுக்கு புரியவைத்தார். இதனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் இசை அமைப்பாளர் அனிருத்தும் தனுஷுடன் பெரிதாக டச்சில் இல்லை காரணம் தனுஷுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விடவும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைப்பதில் அனிருத் அதிக முக்கியம் காட்டுவதே இந்த பிரிவுக்கு காரணம் என பிரபல சினிமா விமர்சகர் வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











