கென் கருணாஸின் யூத் பட ஹீரோயின்களை அவமானப்படுத்திய தனுஷ்?.. ஆஹா இப்படி ஆகிப்போச்சே

சென்னை: கருணாஸின் மகனும், நடிகருமான கென் தற்போது யூத் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் சுராஜ் வெஞ்சரமுடு, தேவதர்ஷினி, அன்ஷிமா, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படமானது மார்ச் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும், முட்டை கலக்கி பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடந்தது.

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் கருணாஸ். அவரது மகன் கென். அவர் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதனையடுத்து தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திவந்த அவருக்கு திடீரென வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாருக்கும் அவ்வளவு எளிதில் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது என்பதால்; உடனடியாக கருணாஸும் சம்மதம் தெரிவிக்க; அசுரன் படத்தில் தனுஷுக்கு இரண்டு மகன்களில் ஒருவராக நடித்து அசத்தினார்.

Why Did Dhanush Avoid Handshake With Heroines at Ken Karunas Youth Pre Release Event
Photo Credit:

விடுதலை 2வில் கென்: அந்தப் படத்தில் அவரது நடிப்பு அனைவரிடமும் பாராட்டை பெற்றது. அதனையடுத்து தனுஷுடன் மீண்டும் வாத்தி படத்தில் நடித்தார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்தார். அசுரன் படத்துக்கு பிறகு அவர் தனது நடிப்பில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறியிருந்ததை அடுத்தடுத்த படங்கள் உணர்த்தின. நிச்சயமாக கென் கருணாஸுக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது என பலரும் ஆரூடம் கூறினார்கள்.

கென் கருணாஸின் யூத்: தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார் என எல்லோரும் எதிர்பார்த்த சூழலில் திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதன்படி படத்துக்கு யூத் என்று பெயர் வைத்திருக்கிறார். இதில் அவருடன் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். நளினி, தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களை ஏற்றிருக்கிறார்கள். மார்ச் 19ஆம் தேதி படமானது பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது.

Also Read
ஒரே ஒரு பாட்டு.. ஓயாத பிரச்னை.. ஓபனா சண்டை போட்டுக் கொள்ளும் அறிவு - சந்தோஷ் நாராயணன்!
ஒரே ஒரு பாட்டு.. ஓயாத பிரச்னை.. ஓபனா சண்டை போட்டுக் கொள்ளும் அறிவு - சந்தோஷ் நாராயணன்!

ட்ரெண்டிங்கில் முட்டை கலக்கி: இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் பயங்கர யூத்ஃபுல்லாக இருந்தது. முக்கியமாக படத்தில் இடம்பெற்றிருக்கும் முட்டை கலக்கி பாடல்தான் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இன்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், தனுஷ், கருணாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். இந்நிலையில் அந்த விழாவில் நடந்த விஷயம் ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது விழாவுக்கு வந்த தனுஷ் அங்கே இருந்த அனைவருக்கு கைகள் கொடுத்து, கட்டி அணைத்து நலம் விசாரித்தார். ஆனால் அன்ஷிமா, பிரியான்ஷி, மீனாட்சி ஆகிய மூன்று பேரும் நின்றுகொண்டிருந்தபோது அவர்களுக்கு கைகள் கொடுக்காமல்; வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட்டார். அது அவர்கள் மூன்று பேருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எல்லோருக்கும் செய்தது போல் அவர்களுக்கும் செய்திருக்கலாம்; பாவம் அப்செட் ஆகியிருப்பார்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேநேரம், மேடையில் பேசும்போது மூன்று நடிகைகளையும் பாராட்டத்தான் செய்தார் தனுஷ். குறிப்பாக அன்ஷிமாவின் சிரிப்புக்கு தான் ரசிகை என கூறிய அவர்; சிறை படத்தில் அவரது நடிப்பையும் வெகுவாக புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X