நம்ம ஊர் ரோடு இருக்கும் நிலைக்கு லம்போர்கினி கார் தேவையா?: நடிகர் விளக்கம்

By Siva

திருவனந்தபுரம்: நம் ஊர் சாலைகளின் நிலை தெரிந்தும் லம்போர்கினி காரை வாங்கியது ஏன் என்று தெரிவித்துள்ளார் ப்ரித்விராஜ்.

தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருபவர் ப்ரித்விராஜ். அவர் லூசிபர் மலையாள படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். லூசிபர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Why did I buy Lamborghini?: Explains Prithviraj

ப்ரித்விராஜ் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை கடந்த ஆண்டு வாங்கினார். அவர் லம்போர்கினி கார் வாங்கியதை பார்த்த மக்கள் அவரை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கலாய்த்தனர். அது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் ப்ரித்விராஜ். அவர் கூறியதாவது,

லம்போர்கினி காரை போய் வாங்கலாமா?. உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா என்று பலர் என்னிடம் கேட்டதுண்டு. அது ஒரு நல்ல கேள்வி. ஆனால் லம்போர்கினி என் கனவு கார்.

நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டு சுவரில் லம்போர்கினி கார் போஸ்டரை ஒட்டி வைத்திருந்தேன். சாலைகள் சரி இல்லை என்பதால் நான் லம்போர்கினி வாங்காமல் இருந்திருக்கலாம். 20 ஆண்டுகள் கழித்து எனக்கு அந்த லம்போர்கினி பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் தற்போது எனக்கு அந்த கார் தேவை அதனால் வாங்கினேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X