ஷாரிக்கை ஏன் ஹீரோவாக்கினேன்?: உக்ரம் பட இயக்குனர் விளக்கம்

By Siva

சென்னை: உக்ரம் படத்தில் ஷாரிக்கை ஹீரோவாக்கியது ஏன் என்று இயக்குனர் ரத்தன் லிங்கா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா இடையே காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு முடிவு எடுக்கலாம் என்று ஷாரிக் ஐஸ்வர்யாவிடம் கூறினார்.

அதன் பிறகு என்னென்னவோ நடந்துவிட்டது. இந்நிலையில் ஷாரிக் உக்ரம் படத்தின் ஹீரோவாகியுள்ளார்.

ஷாரிக்

ஷாரிக்

அட்டு படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்கி வரும் உக்ரம் படத்தில் ஷாரிக் ஹீரோவாக நடித்து வருகிறார். அர்ச்சனா ரவி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஷாரிக்கை ஹீரோவாக்கியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ரத்தன் லிங்கா.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

மௌன ராகம் படத்தில் வந்த கார்த்திக் கதாபாத்திரம் போன்று துருதுருவென இருப்பது என் பட ஹீரோவின் கதாபாத்திரம். அதற்கு துடிப்பான இளைஞர் ஒருவரை தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஷாரிக்கின் சில புகைப்படங்களை பார்த்து இவர் தான் சரியான ஆள் என்று முடிவு செய்தேன் என்கிறார் ரத்தன் லிங்கா.

அட்டு

அட்டு

ஸ்க்ரிப்ட் குறித்து பேச வேண்டும் என்று ஷாரிக்கிற்கு போன் செய்து தெரிவித்தோம். மறுநாள் வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால் நான் அட்டு படத்தை இயக்கியவர் என்பது அறிந்த பிறகு சில நிமிடங்களில் அவரே எனக்கு போன் செய்தார். பின்னர் என் அலுவலகத்திற்கு வந்து கதை கேட்டார். நான் கதையை கூறிய பிறகு, நான் எத்தனையோ ஸ்க்ரிப்ட் கேட்டுள்ளேன், ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார் ஷாரிக். அதனால் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று ரத்தன் தெரிவித்துள்ளார்.

விருப்பம்

விருப்பம்

ஒரு நாள் முழுவதும் ஷாரிக்குடன் டெஸ்ட் ஷூட் நடத்தினேன். என் படத்திற்கு ஏற்ற ஹீரோ அவர் தான் என்பதை தெரிந்து கொண்டேன். தற்போது நாங்கள் ஒரு கிராமத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். அங்கு உள்ள இளைஞர்கள் ஷாரிக்கை அடையாளம் கண்டு கொண்டு வந்து செல்ஃபி எடுத்தனர். அவர் பிரபலமாக இருப்பது இந்த படத்தில் பலம் என்று ரத்தன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X