அஜித் தாயார் மறைவு.. மல்லிப்பூ கொண்டு சென்ற பார்த்திபன்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: அஜித் குமாரின் தாயார் மோகினி மணி அம்மாளின் இறுதிச்சடங்கில் பலர் பெரிய மலர் வளையங்களுடன் அஞ்சலி செலுத்த வந்த நிலையில், நடிகர் பார்த்திபன் மட்டும் கையில் சிறிய மல்லிப்பூ சரத்துடன் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சமூக வலைதளங்களில் வைரலான அந்த காட்சிக்கு தற்போது பார்த்திபன் உருக்கமான விளக்கம் அளித்திருப்பது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
நடிகரும், கார் ரேசருமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி அம்மாள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மே 30ந் தேதி சனிக்கிழமை உயிரிழந்தார். மோகினி மணி, மறைந்த பி.எஸ். மணி அவர்களின் துணைவியார் ஆவார்.அஜித்குமார், அனில்குமார், அனுப் குமார் ஆகியோரின் தாயாரான இவர் அனைவரின் பாசத்திற்குரியவராக இந்த குடும்பத்தை காத்து வந்தார்.

அஜித் தாயார்: அவரது உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மோகினி அம்மாள் உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், திரையுலக பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மோகினி அம்மாளின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மின்மயான வளாகத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது, தாயாரின் உடலை நடிகர் அஜித் குமாரும் அவரது சகோதரர்களும் தோளில் சுமந்து சென்றனர். அந்த காட்சி காண்பவர்களை கண்களை கலங்க வைத்தது. இதையடுத்து மோகினி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மல்லிப்பூ ஏன்?: இந்நிலையில் அஜித் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் பார்திபன், கையில் மல்லிப்பூ எடுத்து சென்று இருந்தார். இதை ஊடகங்கள் அம்புக்குறியிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தன. இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்த பார்த்திபன், அம்பு குறியிட்டு காட்டுவார்கள் என எதிர்பார்க்கவில்லை நான். பெரிய மாலைகள் 'பெரிய' என்பதால் உடனே ஒதுக்கப்பட்டு 'சிறிய' என்பதால் அம்மாவின் காலாடியில் நீண்ட நேரம் இருந்தன இக்கண்ணீர் பூக்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலர் உங்கள் அன்பு ஒன்றே போதும், கடினமான நேரங்களில் சக கலைஞர்காக வந்த அந்த தமிழரின் உயர்ந்தமிகு மாண்புக்கு வணங்குகின்றோம் என கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications