அப்படி சொன்னதும் நான் நம்பவே இல்லை.. கமல் பற்றி மனம் திறந்த சிங்கம்புலி
சென்னை: கமல்ஹாசன் இப்போது பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதனால் இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்திருக்கிறார். அதன்படி சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவரை சந்தித்த அனுபவம் பற்றி சிங்கம்புலி; தாய் கிழவி பட சக்சஸ் மீட்டில் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து அரசியல் தளத்துக்கு சென்ற கமல்ஹாசனுக்கு அங்கு பெரிய அளவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து; தனது ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அந்த உற்சாகத்தோடு சீனியர் இயக்குநரான ஷங்கருடன் இந்தியன் 2 படத்தில் இணைந்தார். முதல் பாகம் போன்றே இதுவும் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தால்; படம் பாதாளத்தில் விழுந்துவிட்டது. சரி இந்தியன் 2தான் மோசம் செய்துவிட்டது; மணிரத்னமாவது காப்பாற்றுவார் என எண்ணி தக் லைஃப் படத்தில் நடித்தார்.

தொடர்ந்துஅடிதான்: ஆனால் அந்தப் படமும் அடிதான் வாங்கியது. இந்தியன் 2 போலவே தக் லைஃபையும் ட்ரோல் மெட்டீரியலாக மாற்றிவிட்டார்கள் ரசிகர்கள். சொல்லப்போனால் அவரது ஒட்டுமொத்த கரியரில் இதுவரை இந்த இரண்டு படங்கள் மாதிரி வேறு எந்த படமும் இவ்வளவு மோசமான கிண்டலையும் விமர்சனத்தையும் சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனால் உடனடியாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார் உலக நாயகன்.
அன்பறிவுடன் கூட்டணி: சீனியர் இயக்குநர்களை நம்பி மோசம் போனதால் தனது பார்வையை இளம் இயக்குநர்கள் பக்கம் திருப்பியிருக்கிறார் கமல். அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான சண்டை பயிற்சியாளர்களாக வரும் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. நிச்சயம் இப்படம் பெரிய எற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விண்வெளி நாயகனின் ரசிகர்கள்.
செலிபிரிட்டிகளும் ரசிகர்கள்தான்: இதற்கிடையே கமலுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களாக இருப்பது அனைவரும் அறிந்ததுதான். லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், மணிகண்டன், ரோபோ சங்கர் என பலர் அவரது ரசிகர்கள். அந்த லிஸ்ட்டில் இப்போது சேர்ந்திருப்பது சிங்கம்புலி. தாய் கிழவி படத்தில் கமலின் ரசிகராக நடித்து அசத்திய அவர்; ரியல் வாழ்க்கையில் கமலை நேரில் சந்தித்த அனுபவம் குறித்து தாய் கிழவி படத்தின் சக்சஸ் மீட்டில் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சிங்கம்புலி பேச்சு: அவர் அந்த விழாவில் பேசுகையில், "கமல்ஹாசனை இதுவரை நேரில் பார்த்ததில்லை என்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தேன். அதை அவரும் பார்த்திருப்பார் போல. சில நாட்களுக்கு முன்பு ஒரு ஃபோன் வந்தது. அதில் கமல்ஹாசனை பார்க்க வாருங்கள் என கூறினார். நான் உடனே, 'ஏன் யா நான் உனக்கு என்ன செய்தேன். ஏன் இப்படி பொய் சொல்ற' என கூறி நம்பவே இல்லை. ஆனால் உண்மையில் வர சொல்லியிருந்தார்கள். அவரை போய் பார்த்தபோது, 'ஏன் என்னை பார்க்கவில்லை வந்திருக்கலாமே' என கேட்டார்.


Click it and Unblock the Notifications















