»   »  இப்படியா ஆகணும்: இதயம் நொறுங்கிப் போய் கிடக்கும் தனுஷ்

இப்படியா ஆகணும்: இதயம் நொறுங்கிப் போய் கிடக்கும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலிய ஓபன் டென்னஸ் போட்டியில் ரஃபேல் நாடால் தோல்வி அடைந்ததை பார்த்து அவரது தீவிர ரசிகரான தனுஷ் இதயம் நொறுங்கிப் போயுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸை வீழ்த்தி கோப்பையை வென்றார்.

Why does Dhanush say heart breaking?

இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நாடாலும் மோதினர்.

இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஃபெடரர் நாடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இது ஃபெடரர் வென்றுள்ள 18வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை ஆகும்.

போட்டியை பார்த்த நாடாலின் ரசிகரான தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நாடால் ரசிகராக இதயம் நொறுங்குகிறது. ஆனால் ஃபெடரர், நாடால் மோதிய மேலும் ஒரு இறுதிப் போட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி. சிறப்பாக விளையாடினீர்கள் கிங் ரோஜர். #18 மற்றும் இன்னும் பல. லவ் யூ ரஃபா என தெரிவித்துள்ளார்.

Read more about: dhanush, தனுஷ்
English summary
Actor Dhanush tweeted that, 'Heart breaking as a nadal fan. But happy to have witnessed one more fedal finals. Well played king roger. #18 and counting. Love you RAFA'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil