»   »  அஜீத் சார் இது நிஜமா.. நம்பலாமா.. உண்மைதானா???

அஜீத் சார் இது நிஜமா.. நம்பலாமா.. உண்மைதானா???

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அஜித்தின் 56வது படத்திற்கு ‘அச்சமில்லை' எனப் பெயரிடப்படலாம் என புதுத் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பான பேச்சுக்களைக் கிளப்பி விட்டுள்ளது.

‘என்னை அறிந்தால்' பட வெற்றிக்குப் பிறகு, சிவா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் அஜீத். இது அஜீத்தின் 56வது படமாகும். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும், அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 9 ந்தேதி நடைபெற்றது.

இந்த வருட ஹிட்...

இந்த வருட ஹிட்...

ஏற்கனவே, அஜீத், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் அண்மையில் தீம் மியூசிக் போட்டுக் கொடுத்துள்ளார். அதனைக் கேட்ட சிவா, 'இதுதாய்யா இந்த வருட ஹிட்' எனத் தெரிவித்துள்ளாராம்.

மீண்டும் பாசமலர்...

மீண்டும் பாசமலர்...

இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் கபீர் சிங் நடிக்க உள்ளார். அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் படப்பிடிப்பு...

விரைவில் படப்பிடிப்பு...

மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் சிவா இந்த படத்திலும் அஜித்துடன் கை கோர்த்துள்ளார். அடுத்த மாதம் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.

அச்சமில்லை...

அச்சமில்லை...

இந்நிலையில் இப்படத்திற்கு 'அச்சமில்லை' எனப் பெயரிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் படத்தின் பெயரை சிவா அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தாறுமாறான எதிர்பார்ப்பு...

தாறுமாறான எதிர்பார்ப்பு...

தல படத்தின் புதுப் பெயர் குறித்து ரசிகர்களிடையே தாறுமாறான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்போதே அச்சமில்லை என்ற பெயரை பிரபலப்படுத்த களம் குதித்து விட்டனர் ரசிகர்கள்.

English summary
As we all know 'Thala' Ajith will soon start working on his 56th film that will be directed by 'Siruthai' Siva. Now we heard from Kollywood sources that the film has been titled as 'Achchamillai' which means 'No Fear' in English. However, we will have to wait for an official confirmation of the title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil