அஜித் ஏன் பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார்?: இது யார் ஐடியா தெரியுமா ?
Recommended Video

சென்னை: வினோத் ஏன் சொந்தமாக படம் எடுக்காமல் பிங்க் படத்தை ரீமேக் செய்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்தவர் இயக்குனர் ஹெச். வினோத். அவர் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்று தகவல் வெளியானதும் ஏதோ வித்தியாசமான கதை தயார் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தி படமான பிங்கை ரீமேக் செய்கிறார்.
அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

அஜித்
விஸ்வாசம் படத்தை அடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் தான் நடிக்க வேண்டும் என்று அஜித் முடிவு செய்தார். இதையடுத்து அவரே வினோத்தை தேர்வு செய்து மும்பைக்கு சென்று போனி கபூரை சந்தித்து பேச வைத்தார். வினோத்தும் அஜித் படம் பற்றி ஒரு ஐடியாவை போனியிடம் கூறினார்.

பரிந்துரை
பிங்க் படத்தை ரீமேக் செய்யலாமே என்று ஐடியா கொடுத்ததே அஜித் தான். அஜித்தின் ஐடியா வினோத்துக்கு பிடிக்கவே அவர் ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால் பிங்க் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்கிறார் வினோத். இதற்கு போனி கபூர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்
பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் வயதான வழக்கறிஞராக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார். அதனால் மாஸ் டான்ஸ், காதல் காட்சிகளை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. பிங்க் படம் அமிதாபுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது போன்று அஜித்துக்கும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் படம்
அஜித் தன் கணவரின் தயாரிப்பில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசை. ஸ்ரீதேவி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள அஜித் அவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார். அஜித் ஸ்ரீதேவி மீது வைத்திருக்கும் மரியாதையை பார்த்து போனி கபூரே அசந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











