பட்டம் வாங்கிய விஜய் மகள் திவ்யா சாஷா.. அண்ணன் ஜேசன் சஞ்சய் பங்கேற்ற காட்சிகள் வைரல்..செம பிணைப்பு
சென்னை: விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்னை சில நாட்களுக்கு முன்பு பொதுவெளிக்கு தெரிய வந்திருக்கிறது. தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென சங்கீதா கேட்டதைவிடவும்; விஜய் மீது அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள்தான் பெரிய அதிர்வலைகளை கிளப்பின. ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கானது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற ஆவல் அனைவரிடமும் இருக்கிறது.
விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா; இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். தனது கணவருக்கு பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக வேலை பார்த்து ஏகப்பட்ட விஷயங்களில் ஒன்றாகவே நின்ற அவர்; சில நாட்களுக்கு முன்பு விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென நீதிமன்ற படிகள் ஏறியிருக்கிறார். முக்கியமாக விவாகரத்து எதற்காக வேண்டும் என்று அவர் சொல்லிய காரணங்களை நம்புவதா வேண்டாமா என்றுதான் பலரும் குழம்பி போயிருக்கிறார்கள். விஜய்யின் ரசிகர்களோ அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படி செய்யலாமா அண்ணி?: சங்கீதாவிடமிருந்து இப்படி ஒரு அடி வரும் என்பதை எதிர்பார்க்காத ரசிகர்களும், தவெக தொண்டர்களும், 'சங்கீதா அண்ணி நீங்களே விஜய் அண்ணாவுக்கு துரோகம் செய்யலாமா?.. இப்படி செய்துவிட்டீர்களே' என முதல் நாளில் உருக்கத்தோடு பேசினார்கள். அடுத்தடுத்த நாட்களிலோ அவர்களது கோபம் திமுக மீது மட்டுமின்றி சங்கீதா மீதும் பாய்ந்தது. இதன் காரணமாக மோசமான சொற்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது கடும் கண்டனத்தை சந்தித்தது.
விஜய் ஏன் அமைதி?: இந்த விஷயத்தில் விஜய் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. விவாகரத்து குறித்து பேச வேண்டாம் சரி; குறைந்தபட்சம் தனது மனைவியை மோசமாக விமர்சிக்க வேண்டாம் என கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் கட்டளையிட்டு ஒரு ட்வீட்டை கூடவா போடக்கூடாது; இப்படியே அமைதியாக இருந்தால் இமேஜ் மேற்கொண்டு சேதாரம் ஆகும் என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்பதுதான் பெரும்பான்மையானோரின் கருத்தாக இருக்கிறது.
பிள்ளைகளின் மனநிலை: இது ஒருபக்கம் இருக்க விஜய்யின் மகனும், மகளும் இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது உறுதியாக வெளியே தெரியவில்லை. ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க தனது தாய்க்குதான் சப்போர்ட் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சோஷியல் மீடியாவில் தனது தந்தையை மகன் ஜேசன் சஞ்சய் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளது.
Congratulations Divya Saasha Joseph Vijay 💐
— Rajini Kaavalan (@kavalan_rajini) June 23, 2025
Meanwhile @actorvijay is busy with Trisha's Dog 🌚pic.twitter.com/bkZyRNTCFW
என்ன வீடியோ?: அதாவது விஜய்யின் மகளான திவ்யா சாஷா பள்ளியில் பட்டம் வாங்கியபோது; அண்ணன் ஜேசன் சஞ்சய் பங்கேற்று தனது தங்கைக்கு அன்போடு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. வீடியோவை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பாக மகள் பட்டம் வாங்கிய விழாவுக்கு விஜய் சென்றிருக்க வேண்டும். அதுதான் ஒரு தந்தையாக அவர் செய்திருக்க வேண்டியது. ஆனால் அவர் செல்லாதது பெரிய ஏமாற்றம்தான். மனைவியுடன் எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பிள்ளைகளை விட்டுக்கொடுக்க எப்படி மனம் வந்தது என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















