»   »  விஜய்க்கு வில்லனாக வேண்டும்: விஷால்

விஜய்க்கு வில்லனாக வேண்டும்: விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் விஷால்.

நடிகர் விஷால் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளார். அவருக்கும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமாருக்கும் இடையே நடக்கும் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக உள்ளது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சரத்குமார் பற்றி விஷாலிடம் கேள்வி கேட்டுள்ளார்.

சரத்குமார்

கேள்வி: சரத்குமார் சார் புரொடக்ஷன்ல நீங்க நடிப்பீங்களா?

பதில்: சம்பளம் குடுப்பாங்களா

அஜீத்

தல அஜீத் பற்றி சொல்லுங்க ப்ரோ.. அவர் கூட நடிக்க சான்ஸ் வந்தா நடிப்பீங்களா என்ற கேள்விக்கு விஷால் கூறுகையில், கண்டிப்பாக. அஜீத் திறந்த மனமுள்ளவர் என்றார்.

விஜய்

கேள்வி: விஜய்யின் நண்பர், சகோதரர் அல்லது வில்லன். இந்த மூன்றில் எந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்வீர்கள்?

பதில்: வில்லன்

ஆர்யா

கேள்வி: சூட்கேஸில் என்ன வைத்திருக்கிறீர்கள்? அ) கூடுதல் புல்லட்டுகள் ஆ) பழைய 500/1000 ரூபாய் நோட்டுகள் இ) பயன்படுத்திய உள்ளாடை (கேள்வி கேட்டவர் நடிகர் ஆர்யா)

பதில்: குண்டு துளைக்காத உள்ளாடை மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் மச்சி

கார்த்தி

கேள்வி: காலையில் எழுந்தவுடன் உங்கள் நினைவுக்கு வரும் முதல் விஷயம்?

பதில்: அண்மை காலமாக கார்த்தி மற்றும் நடிகர் சங்கம்

English summary
When good friend Arya asked a funny question on twitter Vishal replied that 'he is carrying a bullet proof underwear wit old notes Machi'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil