»   »  அண்ணன் மறைவுக்கும் வரலை... குரு மறைவுக்கும் வரலை... கமலை சுற்றும் கேள்வி!

அண்ணன் மறைவுக்கும் வரலை... குரு மறைவுக்கும் வரலை... கமலை சுற்றும் கேள்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு சுப காரியத்துக்கு செல்கிறோமோ இல்லையோ துக்க காரியத்துக்கு சென்றே ஆக வேண்டும் என்பது நம் பண்பாடு. நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் இறந்தால் இனி எப்போது இவரைக் காணப்போகிறோமோ என்ற ஏக்கத்திலேயே எதிரியாக இருந்தாலும் நேரில் கலந்துகொள்வார்கள். ஆனால் சொந்த அண்ணன் சந்திரஹாசன் மறைவுக்கு கூட போகவில்லையே கமல்? என்று கேள்வி எழுந்துள்ளது.

கமலை சினிமாவுக்கு அழைத்து வந்த குரு இயக்குநர் சிகரம் பாலசந்தர். பாலசந்தர் மறைவின் போது அமெரிக்காவில் உத்தம வில்லன் ஷூட்டிங்கில் இருந்தார் கமல்ஹாசன். அதனால் வர முடியவில்லை என்று சொல்லிவிட்டார்.

Why Kamal Hassan not attended his brother funeral?

கடந்த 19 ஆம் தேதி கமலின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் இறந்தார். அவரது உடல் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்த்தார்கள். கொண்டு வரப்படவில்லை.

ட்விட்டரில் மட்டும் அண்ணனைப் பற்றி எழுதிய கமல் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. கமல் மட்டுமல்ல சாருஹாசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாருமே சந்திரஹாசன் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை.

உச்சகட்டம் என்ன தெரியுமா... அவர் இறந்த அதே நாள் பிற்பகலில் சந்திரஹாசனின் அண்ணன் மகள் சுஹாசினியும் அவர் கணவர் மணிரத்னமும் காற்று வெளியிடை படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடினார்கள் சத்யம் அரங்கில்.

குடும்பத்துக்குள் பிரச்னை என்ற ரீதியில் செய்தி வருகிறது. கமலைக் கேட்டால், எங்க வீட்டுக்குள் எட்டிப் பாக்காதீங்க என்பார். நமக்கேன் வம்பு!

English summary
Why Kamal Hassan not attended his brother funeral? Here is the reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil