»   »  ரஜினியும் கமலும் எப்போ எதுக்காக மீட் பண்ணாங்க தெரியுமா?

ரஜினியும் கமலும் எப்போ எதுக்காக மீட் பண்ணாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில தினங்களுக்கு முன்பு ஒரு படம் இணையதளங்களில் உலா வந்தது. அதில் ரஜினியும் கமலும் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

அதற்குள், ரஜினியும் கமலும் நடிகர் சங்கப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கச் சந்தித்தார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது.

Why Rajini meets Kamal?

இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டதெல்லாம் உண்மைதான். ஆனால் நோக்கம் வேறு.

சமீபத்தில் தனது வீட்டின் மாடிப் படிகளிலிருந்து விழுந்ததில் கமலுக்கு கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு கமல் ஓய்வெடுத்து வருகிறார் அல்லவா... இன்னமும் குணமடையாத அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய ரஜினி, ஜஸ்ட் ஒரு போன் பண்ணிவிட்டு கமல் அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டார்.

ஒரு மணி நேரத்துக்கும் நீண்டதாம் அந்த சந்திப்பு. தங்களது ஆரம்ப காலத்திலிருந்து, இப்போது நடந்து கொண்டிருக்கும் புதுப்படங்கள் வரை பேசிக் கொண்டிருந்தார்களாம்.

English summary
Recently Rajini has met Kamal at his Alwarpet office and inquired about his helath.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil