பெரிய இழப்பை சந்தித்த கமல்.. உதவிய ரஜினி.. சுந்தர். சி படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க அதுதான் காரணமா?
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் உண்டு செய்திருக்கிறது. முக்கியமாக கமலின் தயாரிப்பு என்பதால் கண்டிப்பாக தரமான ஹிட்டை படம் பதிவு செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்க காரணம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த் அடுத்ததாக கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. 40 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் இணைந்து நடித்தார்கள். இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் இணையவிருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஆனால் இப்படத்தில் கமல் நடிக்காமல் படத்தை தயாரிக்க மட்டுமே செய்வார் என்று அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
சூப்பர் கூட்டணி: சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி ஏற்கனவே அருணாச்சலம் படத்தில் நடித்திருக்கிறார். சுந்தர்.சியும் சமீபத்தில் மதகஜராஜா என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்டார். போதாக்குறைக்கு கமலும் இதில் தயாரிப்பின் மூலம் இணைந்திருப்பதால் திரையில் விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம். இதனை சுந்தர் எப்படி இயக்கப்போகிறார் என்ற கேள்விதான் பலரிடமும் எழுந்திருக்கிறது.

ஃபார்முலா மாற்றப்படுமா?: ரஜினிகாந்த் பெரும்பாலும் இப்போது ஆக்ஷன் ஜானர் கதைகளிலேயே நடித்துவருகிறார். கூலி, ஜெயிலர் எல்லாம் அந்தவகைதான். அவற்றில் ஜெயிலர் மட்டும்தான் வெற்றி. ஃபேமிலி ஆடியன்ஸை குறிவைத்து ரஜினி கடைசியாக நடித்த படம் என்றால் அது அண்ணாத்ததான். ஆனால் அப்படத்தை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பி வைத்து தோல்வி படமாக கொடுத்திருந்தார் இயக்குநர் சிறுத்தை சிவா. எனவே இதனை ஃபேமிலி ஆடியன்ஸ் படமாக சுந்தர். சி கொடுக்க வேண்டும் என்பதுதான் பலரது ஆவல்.
ஏமாற்றம்தான் ரசிகர்களுக்கு: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இதில் கமல் நடிக்காதது நிச்சயம் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிரது. ஒருவேளை இதில் அவரும் இணைந்து நடித்திருந்தால் படத்தின் வியாபாரம் மேற்கொண்டு பெருகியிருக்கும், வசூலிலும் பெரிய சாதனையை படைக்க வாய்ப்பு அமைந்திருக்கும் என திரைத்துறை ஆர்வலர்களும் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
இதுதான் காரணம்: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "விக்ரம், அமரன் ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. அந்த இரண்டு படங்களின் மூலம் கமலுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வந்தது. அவ்விரண்டு படங்களில் பெற்றதை தக் லைஃப் படத்தில் ஒட்டுமொத்தமாக இழந்துவிட்டார். அதனால் அவருக்கு சிக்கலும் உருவானது. எனவே என்ன செய்வதென்று தெரியாத கமல் உடனே ரஜினியை சந்தித்து விஷயத்தை சொன்னார். அதற்கு ரஜினியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் டேட்டுகளை கொடுத்துவிட்டார். இதுதான் இப்படத்தில் ரஜினி நடிக்க காரணம்" என்றார்.


Click it and Unblock the Notifications











