சுந்தர். சி இயக்கத்தில் ரஜினி நடிக்க இதுதான் காரணமா?.. லோகி பார்த்த வேலையால் மனசே மாறிடுச்சா?
சென்னை: 74 வயதிலும் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷாவாக தூள் கிளப்பி வரும் ரஜினிகாந்த் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருந்தார். ஆனால், ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான அந்த படத்தை குடும்பத்துடன் ரசிகர்கள் பார்க்க முடியாதபடி 'ஏ' சான்றிதழ் படமாக வெளியானதால் ஏகப்பட்ட ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
அதை மனதில் வைத்துக் கொண்டு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் தியேட்டருக்கு வந்து ஜாலியாக சிரித்து சந்தோஷமாக பிளட் வார் இல்லாத ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக சுந்தர். சி இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்று கூறுகின்றனர்.

மேலும், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்றால் அது அதிக பட்ஜெட் போகும் என்கிற நிலையில், உடனடியாக குறைந்த பட்ஜெட்டில் ஒரு வெற்றிப் படத்தை கொடுக்கவே சுந்தர். சியை தேர்வு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அருணாச்சலம் பார்ட் 2வா?: சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படம் கடந்த 1997ம் ஆண்டு வெளியானது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர். சிக்கு கிடைத்த நிலையில், அருணாச்சலம் பார்ட் 2வா அல்லது அரண்மனை பார்ட் 5வா என ரசிகர்கள் ஏகப்பட்ட யூகங்களை கிளப்பி வருகின்றனர். ஆனால், கண்டிப்பாக முத்து, அருணாச்சலம், படையப்பா ரேஞ்ச் படமாகவே இருக்கும் என்பதும் இருக்க வேண்டும் என்பதும் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. சந்திரமுகி போல சுந்தர். சி ஸ்டைலில் ஒரு படம் வந்தாலும் சூப்பராகத்தான் இருக்கும். எப்படி இருந்தாலும், கிளைமேக்ஸில் கமல்ஹாசனின் கேமியோ வந்துவிட்டால் படம் மெகா பிளாக்பஸ்டர் தான்.

ஏகப்பட்ட லிட்டர் ரத்தம்: போலீஸ் அதிகாரியாகவும், கேங்ஸ்டராகவும் ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், ஏகப்பட்ட லிட்டர் ரத்தங்கள் ஸ்க்ரீனில் தெறிப்பதாகவும் சூப்பர் ஸ்டார் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என பலரும் கூறி வந்த நிலையில், கடைசியாக வெளியான கூலி திரைப்படமும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அடுத்து ஜெயிலர் 2 படமும் ஆக்ஷன் அதிரடி படமாக இருக்கும் என்பதால், செம ஜாலியான படமாக ரசிகர்களுக்கு ஒரு படத்தை கொடுக்கவே இந்த முடிவு என்கின்றனர்.

ஜாலியான படம் பண்ணலாம்: சுந்தர். சி என்றாலே ஜாலியாகவும் கவர்ஃபுல்லாகவும் படம் எடுப்பார் என்றும் அரண்மனை சீரிஸ் படங்கள் மூலம் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார் என்பதும் ரசிகர்களுக்குத் தெரியும் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வரும் சுந்தர். சி விரைவில் அந்த படத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அடுத்தாக கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் கண்டிப்பாக ஃபேமிலி எண்டர்டெயினர் படமாகவே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் விருப்பமும் அதுவாகவே உள்ளது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











