42 வயதாகியும் திருமணமே செய்துக்கொள்ளாமல் இருக்கும் ரக்ஷித் ஷெட்டி.. ராஷ்மிகா தான் காரணமா?
பெங்களூர்: நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் இடையே பிரிவு வெடிக்க விவாகரத்து செய்து பிரிந்தனர். நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதே போல சமந்தாவும் சமீபத்தில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக் கொண்டார்.
விஜய் தேவரகொண்டாவை பல வருடங்களாக காதலித்து வரும் ராஷ்மிகா மந்தனா பிப்ரவரி 26ம் தேதி உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் ராஜா போல கம்பீரமாக குதிரையில் வந்த விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துக் கொண்டு இன்று ஹனிமூனுக்கும் கிளம்பி விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலரும் கன்னட நடிகருமான ரக்ஷித் ஷெட்டி மட்டும் "நான் இன்னமும் அங்கேயே தான் இருக்கேன் ஜானு" என 96 பட விஜய் சேதுபதி போல திருமணமே செய்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என அவரது ரசிகர்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
9 வருடத்துக்கு முன் நின்ற திருமணம்: பெங்களூருவில் சினிமா வாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக தேடி அலைந்து ஆடிஷன் செய்துக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டி ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். மேலும், அந்த படத்தின் படப்பிடிப்பு சமையத்திலேயே இருவருக்கும் காதலும் மலர்ந்தது. 2017ம் ஆண்டு இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். ஆனால், திடீரென ஏதோ ஒரு பெரிய காரணத்தால் அவர்களது திருமணம் நடைபெறாமல் அப்படியே நின்று போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூவ் ஆன் ஆன ராஷ்மிகா: கன்னட திரையுலகில் இருந்து டோலிவுட்டுக்கு வந்த ராஷ்மிகா மந்தனா டியூட் பட மமிதா பைஜு போல இமிடியேட்டாக மூவ் ஆன் ஆகி விஜய் தேவரகொண்டா உடன் கீதா கோவிந்தம் படத்தில் நடிக்கும் போதே அவரை காதலிக்கத் தொடங்கிவிட்டார். பல வருட ரகசிய காதலுக்குப் பிறகு தற்போது இருவரும் கணவன் மனைவியாகவும் மாறிவிட்டனர்.
சிம்பு, த்ரிஷாவை போல சிங்கிளாக ரக்ஷித் ஷெட்டி: நயன்தாராவை காதலித்த நடிகர் சிம்புவும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு மூவ் ஆன் ஆகிவிட்டார். நடிகை த்ரிஷா கடந்த 2015ம் ஆண்டு வருண் மணியன் என்பவரை நிச்சயம் செய்தார். ஆனால், அவரது திருமணமும் நின்றுவிட்டது. அதன் பின்னர் இதுவரை யாரையும் அவர் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. அந்த வரிசையில் 42 வயதாகும் ரக்ஷித் ஷெட்டியும் இன்னமும் திருமணமே செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ராஷ்மிகா திருமண செய்தியை அறிந்த ரக்ஷித் ஷெட்டி ரசிகர்கள் அவரையும் சீக்கிரமாக திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தி வருகின்றனர். பூவே உனக்காக விஜய் போல சிலர் காதலித்த பெண் கைகூடவில்லை என்றால் அப்படியே கடைசி வரை திருமணமே வேண்டாம் என சிங்கிளாக வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











