பராசக்தி படத்தை எதற்காக சூர்யா மிஸ் செய்ய வேண்டும்?.. ஓபனாக பேசிய செய்யாறு பாலு
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தார். ஆனால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார். எனவே பராசக்தி என்று அந்தப் படத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார் சூர்யா. அதீத எதிர்பார்ப்புடன் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது படம். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்திலும் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை இயக்க செல்லவிருக்கிறார். இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிப்பதாக இருந்தார்.

பராசக்தி: ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார். அதற்கு பல்வேறு யூகங்கல் சொல்லப்படுகிறது. சூர்யா வெளியேறியதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தையா சூர்யா மிஸ் செய்தார் என்று வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஓபனாக பேசியிருக்கிறார்.
செய்யாறு பாலு வீடியோ: அவர் இதுதொடர்பாக பேசுகையில், "பராசக்தி டைட்டில் டீசர் செம வைபாக இருக்கிறது. திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் கல்லூரியில் படித்து மிமிக்ரி ஆட்டிஸ்ட்டாகி, பிறகு சேனல் மூலம் பிரபலம் ஆகி பல கிண்டல்களை சந்தித்தவர்தான் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு முன்பு அவரது நிலைமையே வேறு. அவருக்கு 75 கோடி ரூபாய் கடன் இருந்ததாகக்கூட சொல்வார்கள். ஆனால் அதிலிருந்து அவர் எப்படியோ வெளியே வந்துவிட்டார்.
ஏன் மிஸ் செய்தார்: அவர் தன் மீது வைக்கப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் எதிர்வினை ஆற்றவே இல்லை. அதுதான் அவரது புத்திசாலித்தனம். பராசக்தி டைட்டில் டீசரை பார்க்கும்போது இந்தப் படத்தை ஏதற்காக சூர்யா தவறவிட்டால் என்றுதான் யோசித்தேன். அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அதாவது சூர்யா இப்போது மும்பையில் வசித்துவருகிறார். பராசக்தி படத்தின் மையக்கரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் ஹிந்தி திணிப்பையும் மையமாக கொண்டது.
இதான் காரணம்: மும்பையில் இருக்கும் சூழலில் ஹிந்திக்கு எதிராக நடித்து எதற்காக எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதனால்தான் அவர் இப்படியான முடிவை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. இந்தப் படத்தை தவறவிட்டதுபோலவே வணங்கான் படத்தையும் மிஸ் செய்துவிட்டார். ஆனால் வாடிவாசல் படத்தை அவர் எந்தக் காரணம் கொண்டும் மிஸ் செய்துவிடமாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











