அந்த பிரச்சனை ஞாபகம் இருக்கா.. கமல் 60க்கு சிவகார்த்திகேயனை அழைக்காததற்கு காரணம் இதுதானாம்!
Recommended Video
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் கமல் 60க்கு அழைக்கப்படாததற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் கால்பதித்து 60 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் அவரது 65வது பிறந்த நாளை முன்னிட்டும் கமல் 60 என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
உங்கள் நான் என்ற இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த பெரும்பாலான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பல பிரபலங்கள்
முன்னணி நடிகர்கள் மற்றும் கமலுடன் இணைந்து நடித்த அக்கால இக்கால நடிகைகள் மற்றும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் விஜயும் அஜித்தும் பங்கேற்கவில்லை.

அழைப்பு விடுக்கப்படவில்லை
அதேபோல் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனும் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது கமல் தரப்பில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் வெளியானது.

அப்போது நடந்த சம்பவம்
இந்நிலையில் சிவகார்த்திகேயேனுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு காரணம் என்னவென்று ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன், தன்னை ரஜினி ரசிகர் என்று கூறிக்கொண்டு கமலை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

விமான நிலையத்தில் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க சென்ற சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனின் ரசிகர்கள் தாக்கினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதான் காரணம்
இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் இன்னும் உள்ளுக்குள் புகைத்துக்கொண்டுதான் இருக்கிறதாம். அதனை மனதில் வைத்துதான் கமல் 60க்கு சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











