சி.எம் ஆன பிறகு விஜய் கோட் போட காரணம் இதுதான்.. அவர் அதெல்லாம் தாங்கமாட்டாராம்.. அம்மா சொன்ன காரணம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கும் விஜய்; தன்னுடைய பணிகளை மும்முரமாக செய்துவருகிறார். அவர் சி.எம் ஆனதிலிருந்து ஈர்த்த இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் அணிந்து வந்த கோட் சூட்தான். இத்தனை வருடங்கள் வேட்டி, சட்டைகளால் நிரம்பியிருந்த தமிழ்நாடு அரசியல் மேடை; இப்போது கோட், சூட்களிலும் பேண்ட் சட்டைகளிலும் ஜொலித்துக்கொண்டிருப்பதை இளைஞர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் அவர் கோட், சூட் போடுவதற்கான காரணம் தெரியவந்திருக்கிறது.
சி. ஜோசப் விஜய் எனும் நான் என விஜய் சில வாரங்களுக்கு முன்பு சொன்னபோது; 'கையிலே ஆகாசம்' பாடல் வரிகள்தான் விஜய்யின் ரசிகர்களிடமும், குடும்பத்தினரிடமும் ஓடியிருக்கும். அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே பெரும்பாலானோர் சொன்னது, 'இவரால் விஜயகாந்த் வாங்கிய வாக்கு வங்கியைகூட வாங்க முடியாது' என்பதுதான். ஆனால் அவரது கட்சியோ மொத்தம் 108 தொகுதிகளை வென்று அசத்திவிட்டது. மற்ற கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சரானாலும்; தவெக தனி பெரும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்டத்தில் தொண்டர்கள்: விஜய்யின் வெற்றியை அவரது தொண்டர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். ஏகப்பட்ட எடிட்டுகள், வீடியோக்கள் என சோஷியல் மீடியாக்களே களை கட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த 20 வருடங்களுக்கு விஜய்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பது அவர்களது ஆணித்தரமான கருத்து. ஜென் ஸி தலைமுறைக்கான எம்ஜிஆர்தான் இப்போது அவதரித்திருக்கும் விஜய் என உறுதியாக நம்புகிறார்கள். அதேபோல் குடும்பத்தினரும் ரொம்பவே நிம்மதியாக இருக்கிறார்கள்.
கோட், சூட்டில் விஜய்: அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே பெரும்பாலானவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதற்கு வேறு மாதிரி செய்வதுதான் விஜய்யின் ஸ்டைலாக இருந்தது. கட்சி தொடங்கியபோது கண்டிப்பாக திமுகவை எதிர்க்கமாட்டார்; அவரது படங்களுக்கு அதிமுகதான் தொல்லை தந்தது; எனவே திமுகவுடன் நட்பு கரம் நீட்டுவார் என்று சொல்லப்பட்டது. அவரோ முதல் மாநாட்டிலிருந்து தேர்தலுக்கு முன்பு பேசிய கடைசி மேடை வரை திமுகவையும், ஸ்டாலினையும் தொடர்ந்து அட்டாக் செய்தார்.
அதேபோல் முதலமைச்சராக பதவியேற்கிறார் என்று தெரியவந்தவுடன்; வேட்டி, சட்டையில் தமிழரின் கலாசாரத்தை பிரதிபலிப்பார் என்று எதிர்பார்க்க; அவரோ எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் கருப்பு நிற கோட், சூட்டில் கலக்கிவருகிறார். அதைத்தான் தனது உடையாகவே தேர்ந்தெடுத்துவிட்டார். இத்தனை வருடங்கள் கறை வேட்டிகளில் மின்னிய தமிழ்நாடு அரசியல் மேடை; இப்போது கோட், சூட்டிலும் பேண்ட் சட்டையிலும் ஜொலித்துகொண்டிருக்கிறது.
உறவினர் பேட்டி: அவர் கோட், சூட் அணிவதற்கான காரணம் குறித்து அவரது உறவினர் பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய்யின் மாமா மகள்கள், "விஜய் குளிர் தாங்கமாட்டார். அதனால்தான் அவர் கோட், சூட்டை தேர்ந்தெடுத்திருப்பார் என்று ஷோபா அத்தை சொன்னார். விஜய் அண்ணா எது செய்தாலும் ட்ரெண்டாகும். ஒவ்வொரு படத்துக்கும் கெட்டப் மாற்றுவார். இன்றைய தேதியில் இளைஞர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். அனைத்திலும் ஃப்ரெஷ்ஷான ஸ்டார்ட் போன்று இதையுமே ஃப்ரெஷ் ஸ்டார்ட்டாகத்தான் பார்க்கிறோம். அவர் கோட், சூட்டில் இருப்பது எங்களுக்கே பெரிய ஆச்சரியம்தான்"என்றார்.


Click it and Unblock the Notifications
