எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்.. என் பெயரே போதும்..விஜய் தேவரகொண்டா சொன்ன அந்த விஷயம்!

சென்னை: காதலர்களுக்கும், டீன் ஏஜ் ரசிகர்களுக்கும் பிடித்த படமான கீதா கோவிந்தம் படத்தில் நடித்து இளம் பெண்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகர் விஜய் தேவர கொண்டா. தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், என் பெயரே எனக்கு போதும் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் பேமிலி ஸ்டார். இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார்.

why Vijay Deverakonda doesn t have a title unlike many other South stars

பேமிலி ஸ்டார்: பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை கே.யூ.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபிசுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டாவிடம் எதற்காக உங்கள் பெயருக்கு முன்னால் எந்த பட்டப்பெயரையும் வைக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

என் பெயரே போதும்: அதற்கு பதிலளித்த அவர், நான் விரும்பும் பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே மற்ற நடிகர்கள் வைத்துவிட்டார்கள். தல, தளபதி, தலைவர், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், ரைசிங் ஸ்டார் என அனைத்தும் பிறருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. கடந்த மூன்று நான்கு படங்களின் தயாரிப்பாளர்கள் எதையாவது என் பெயருக்கு முன்னால் வைக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. என் பெயர் எனக்கு போதும், என் அம்மாவும் அப்பாவும் எனக்கு வைத்த பெயரால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், அது போதும். ஒரே ஒரு விஜய் தேவரகொண்டா தான் அது நான் தான். எனக்கு வேறு எதுவும் பிடிக்கவில்லை. விஜய் தேவரகொண்டா என்று அனைவரும் என்னை அழைக்கும் போது அது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்றார்.

விரைவில் திருமணம்: இதையடுத்து திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாம் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கிடையாது, கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வேன், அது நிச்சயம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X