மெர்சல் விவகாரம்.... விஐய் மெளனம் ஏன்?
அக்டோபர் 18ல் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வரி பற்றி சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்டனக் கருத்தை வெளியிட்டார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்.
அகில இந்திய அளவில் ராகுல் காந்தியும், மாநில அளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்களும் மெர்சல் படத்துக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.

Recommended Video

தேசிய அளவில் இது டிரெண்ட் ஆனதால், வட இந்திய தியேட்டர்களில் தமிழ் படங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே திரையிடப்படும் நிலை மாறி மெர்சல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட தொடங்கியுள்ளது.
இருப்பினும் இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை. நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
'கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவேன், மக்கள் பணியாற்ற வருவேன்' என்று முழங்கிய விஜய் தன் படத்துக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய குற்றச்சாட்டு, கேள்விகளுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார். அதே வேளை தனக்கு ஆதரவாகக் கருத்து சொன்னவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், டிவிட்டர் மூலமும் நன்றி சொல்லி வருகிறார்.
அவர் எப்போது வெளிப்படையாக பேசுவார்?
- ராமானுஜம்


Click it and Unblock the Notifications











