என்ன சொல்றீங்க.. இயக்குநர் ராஜமெளலி படத்தோட ஹீரோ விஜய்க்கு வில்லனா? தளபதி 66 ஹாட் அப்டேட்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு 3 வில்லன்கள் உள்ள நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராஜமெளலியின் படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல டோலிவுட் நடிகரை விஜய்க்கு வில்லனாக புக் செய்ய தளபதி 66 இயக்குநர் வம்சி முயற்சித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கூடிய விரைவிலேயே தளபதி 66 படத்தின் ஹீரோயின் மற்றும் வில்லன் உள்ளிட்ட ஆன்போர்ட் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுத பூஜையில் ஆரம்பம்?

ஆயுத பூஜையில் ஆரம்பம்?

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் இயக்குநர் வம்சி அதிகாரப்பூர்வமாக தளபதி 66 படத்தின் அப்டேட்டை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அதிரடியாக பூசணிக்காயை போட்டு உடைப்பது போல அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்நிலையில், வரும் ஆயுத பூஜையன்று தளபதி 66 படத்திற்கு பூஜை போட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

3 வில்லன்கள்

3 வில்லன்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு எதிராக மூன்று வில்லன்கள் நடித்து வருகின்றனர். இயக்குநர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இன்னொரு பிரபல நடிகரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர்.

தளபதி 66ல் யார் வில்லன்

தளபதி 66ல் யார் வில்லன்

இந்நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார்? ஹீரோயின் யார்? இசையமைப்பாளர் யார்? காமெடியன் யார்? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படம் என்பதால் இரு மாநில நடிகர்களும் படத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க டோலிவுட் ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ராஜமெளலி பட ஹீரோ

ராஜமெளலி பட ஹீரோ

பிரம்மாண்ட படங்களை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து வரும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய நான் ஈ படத்தின் ஹீரோ நானியிடம் தான் தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகளை இயக்குநர் வம்சி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Recommended Video

Vijay Antony, Samuthirakani Speech | Naan kadavul illai Pressmeet | Filmibeat Tamil
டக் ஜகதீஷ்

டக் ஜகதீஷ்

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜகதீஷ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஹீரோயின் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.

ஹீரோக்களை வில்லனாக்கும் கலாச்சாரம்

ஹீரோக்களை வில்லனாக்கும் கலாச்சாரம்

சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு மற்ற ஹீரோக்களையே வில்லனாக்கும் கலாச்சாரம் டிரெண்டாகி வருகிறது. ஹீரோவாக நடித்து அசத்தி வந்த விஜய்சேதுபதி மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். மறுபக்கம் மலையாள ஹீரோ பகத் பாசிலும் வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். இந்த வரிசையில் ஹீரோ நானி வித்தியாசமான வில்லனாக விஜய்க்கு எதிராக நடிக்க சம்மதிப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X