Sivakarthikeyan: விஜய் இடத்தை பிடிப்பாரா சிவகார்த்திகேயன்? அடுத்தடுத்த மாஸ் லைன்-அப்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து மாஸ் படங்களை வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் டாக்டர் டான் படங்களை தொடர்ந்து அவரது பிரின்ஸ் படம் சொதப்பினாலும் அடுத்ததாக உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டில் மாவீரன் என்ற வெற்றி படத்தை மீண்டும் கொடுத்தார் இதனிடையே கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி அவரது அயலான் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்கியுள்ள நிலையில் இந்தக் கூட்டணி படத்தின் இரண்டாவது பாகத்திற்காக மீண்டும் இணையவுள்ளது.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் தற்காலிகமாக எஸ்கே 21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் 17ஆம் தேதி அவரது பிறந்த நாளை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது படத்தின் பர்ஸ்ட் லுக் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் எண்ட் கார்ட் போட உள்ளது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து பிரின்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன், கடந்த ஆண்டில் மாவீரன் என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து கடந்த ஜனவரியில் அவரது அயலான் படம் வெளியானது. ஏலியனை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. இதனிடையே அடுத்ததாக தன்னுடைய எஸ்கே 21 படத்தில் அவர் நடித்து வருகிறார்.
எஸ்கே 21 படம்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து வரும் எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய மூன்று மாதங்கள் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவிற்கிடையில் காஷ்மீரில் நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. படம் விரைவில் சூட்டிங் முடிக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டைட்டில் வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: இந்த படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய எஸ் கே 23 படத்தில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார். அடுத்தடுத்து எஸ்கே24 எஸ்கே25 மற்றும் எஸ்கே 26 என அடுத்தடுத்த படங்களில் அவரது இயக்குனர்கள் முடிவாகி உள்ளனர். விரைவில் இந்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்கே 24 படம் தலைவர் 171ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்திலும் சத்யஜோதி மூவிஸ் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
சினிமாவிலிருந்து விலகும் விஜய்: இதனிடையே சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் எஸ்கே 25 படத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் கூட்டணி அமைக்க உள்ளார். அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் படங்கள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம் தயாரிப்பாளராகவும் டாக்டர் மற்றும் டான் படங்களின்மூலம் 100 கோடி கிளப் படங்களை உருவாக்கினார். இந்நிலையில் அவர் கோலிவுட்டின் மிகவும் பிசியான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு தீவிர அரசியலில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். The greatest of all time படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடித்த முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக கூறியுள்ளார்.
விஜய் இடத்தை பிடிப்பாரா சிவகார்த்திகேயன்?: இந்நிலையில் அவரது இடத்தை அடுத்ததாக யார் கோலிவுட்டில் நிரப்புவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அந்த இடத்தில் சிவகார்த்திகேயன் பொருந்துவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்ப குறைவான காலக்கட்டத்திலேயே அதிகமான படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை குறைவான காலகட்டத்திலேயே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











