விரைவில் ப்ரொமோஷனை துவக்கும் விஜய்...இன்று பீஸ்ட் அடுத்த அப்டேட் வருதாமே
சென்னை : கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சோஷியல் மீடியா முழுவதும் பீஸ்ட் படம் பற்றிய பேச்சாக தான் உள்ளது. எப்போது அரபிக்குத்து பாடல் ப்ரொமோவை வெளியிட்டார்களோ அப்போது முதல் பீஸ்ட் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பலமடங்கு அதிகரித்து விட்டது.
பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக அனிருத் இசையில் அரபிக்குத்து பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். அரபிக்குத்து பாடல் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பால் படக்குழு செம குஷியாகி உள்ளது.

பீஸ்ட் ரிலீஸ் தேதி நெருங்குகிறதா
பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி விட்டது. ஆனால் தேதியை இதுவரை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஷுட்டிங் முடிந்து சில மாதங்கள் ஆகி விட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்றே படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பீஸ்ட் அடுத்த அப்டேட்டா
நேற்று செகண்ட் சிங்கிள் பற்றிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. விஜய் சொந்த குரலில் பாடிய ஜாலி ஓ ஜிம்கானா பாடல் செகண்ட் சிங்கிளாக மார்ச் 19ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த பாடலை டைரக்டர் நெல்சனே எழுதி உள்ளார். இந்நிலையில் அடுத்த அப்டேட்டாக பீஸ்ட் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் ப்ரொமோஷன் எப்போ
ஏப்ரல் 13 அல்லது 14 பீஸ்ட் ரிலீஸ் என்பது உறுதியாகி விட்டதாம். அதனால் இனி அடுத்தடுத்த அப்டேட்களை வழங்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாம். அதோடு ஆடியோ வெளியீட்டு விழா இல்லை என சொல்லப்படுவதால், விரைவில் புதிய சர்ப்ரைசுடன் ரிலீஸ் தேதியை அறிவிக்க போகிறார்களாம். ரிலீஸ் தேதி இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாம். ரிலீஸ் தேதி வெளியானதும் விஜய் பீஸ்ட் ப்ரொமோஷனை துவக்க போகிறாராம்.
Recommended Video

அட...இது கூட இருக்கா
இன்று வெளியாக உள்ளதாக சொல்லப்படும் பீஸ்ட் மோஷன் போஸ்டரில் ரிலீஸ் தேதி இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் அடுத்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் எப்போது வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வலிமை படத்தை போல் பீஸ்ட் படத்திற்கும் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானங்களில் கூட அப்டேட் கேட்க துவங்கி விட்டதால், இனி ரசிகர்களை காக்க வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் சன் பிக்சர்ஸ்.


Click it and Unblock the Notifications











