ஹாட்ரிக் ஓடிடி தோல்வியை தவிர்ப்பாரா தனுஷ்? டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது மாறன் திரைப்படம்!

சென்னை: தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள மாறன் திரைப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.

கர்ணன் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

அதன் பிறகு, தனுஷ் நடிப்பில் வெளியான இந்தி படமான கலாட்டா கல்யாணம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில், தற்போது மாறன் திரைப்படமும் ஓடிடியிலேயே வெளியாகி உள்ளது.

சூர்யாவே மாறிட்டார்

சூர்யாவே மாறிட்டார்

தனது இரு படங்களை கொரோனா பரவல் காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு வந்த நடிகர் சூர்யா தனது புதிய படமான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுள்ளார். ஆனால், நடிகர் தனுஷ் தொடர்ந்து ஓடிடி நாயகனாகவே வலம் வருவது அவரது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

தியேட்டரில் கலக்கிய சிம்பு

தியேட்டரில் கலக்கிய சிம்பு

தனுசுக்கு நேரடி போட்டியாக சினிமாவில் பார்க்கப்படும் நடிகர் சிம்பு தனது மாநாடு படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு 100 நாட்கள் அந்த படம் ஓடியதை தியேட்டரிலேயே ரசிகர்களுடன் சமீபத்தில் கொண்டாடி இருந்தார். இந்நிலையில், தனுஷ் படம் மீண்டும் ஓடிடியில் வெளியாகி இருப்பதற்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

கோ படத்தை விட கலக்குமா

கோ படத்தை விட கலக்குமா

மறைந்த இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படம் பத்திரிகையாளர் கதையை மையமாக வைத்து அரசியலில் எந்தளவுக்கு பத்திரிகையாளர்கள் மாற்றத்தை கொண்டு வர முடியும் என காட்டியிருந்தனர். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகி உள்ள மாறன் திரைப்படம் கோ படத்தை விட கலக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கவண் மாதிரி இருக்குமா

கவண் மாதிரி இருக்குமா

அதே இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா சபாஸ்டியன், டி ராஜேந்தர் நடிப்பில் வெளியான கவண் திரைப்படமும் மீடியாவில் நடக்கும் குளறுபடிகளை எடுத்துக் கூறியிருந்தது. அந்த வகையில், இந்த படம் இருக்குமா? இல்லை இயக்குநர் கார்த்திக் நரேன் புதிய கதைக்களத்தை சொல்ல காத்திருக்கிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.

ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பாரா

ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பாரா

நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன் பின்னர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. தனுஷ் நடிப்பில் இந்தி படமாக உருவான கலாட்டா கல்யாணம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி சொதப்பிய நிலையில், ஹாட்ரீக் தோல்வியாக மாறன் அமைந்து விடக் கூடாது என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். நவரசா படத்தில் இடம்பெற்ற புராஜெக்ட் அக்னி படத்தை அசத்தலாக எடுத்த இயக்குநர் கார்த்திக் நரேன் நிச்சயம் இந்த முறை மாஃபியாவில் செய்த தவறை செய்ய மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X