பராசக்தி வசூலை முறியடிக்குமா ‘கர’.. போர் தொழில் இயக்குநரால் தனுஷுக்கு பிளாக்பஸ்டர் கிடைக்குமா?
சென்னை: வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமுடு, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கர' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது.
தனுஷின் 'கர' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. கர படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் சிக்கல் ஏதும் இருக்காது என தெரிகிறது.

இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிகளவில் வசூல் செய்த படம் என்றால் அது சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் தான். அந்த படத்தின் வசூலை தனுஷின் கர படம் முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் டல்லான தனுஷ்: கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் அதிகபட்சமாக 150 கோடி வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 300 கோடி வசூல் செய்து புதிய பெஞ்ச்மார்க்கை செட் செய்துவிட்டது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா, தேரே இஷ்க் மே மற்றும் இட்லி கடை உள்ளிட்ட எந்தவொரு படமும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. குபேரா மற்றும் தேரே இஷ்க் மே திரைப்படங்கள் 100 கோடி வசூலை ஈட்டினாலும் தமிழ்நாட்டில் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை.
பராசக்தி வசூலை முந்துமா கர?: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூலை எல்லாம் தனுஷின் கர முறியடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை தனுஷின் கர படம் முறியடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் 30 வியாழக்கிழமை கர வெளியாகவுள்ள நிலையில், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாத இறுதியில் படம் வெளியாகவுள்ள நிலையில், எந்த அளவுக்கு வசூல் அள்ளும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
விக்னேஷ் ராஜா தான் நம்பிக்கை: ஏப்ரல் மாதம் இதுவரை வெளியான எந்தவொரு படங்களும் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் அதிகபட்சமாக 50 கோடி வசூலை கடந்துள்ளது. போர் தொழில் படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு 50 கோடி வசூலை சாத்தியமாக்கிய விக்னேஷ் ராஜா மீதுதான் ரசிகர்கள் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான பராசக்தி, தாய் கிழவி, யூத் படங்கள் 80 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய நிலையில், கர திரைப்படம் குறைந்த பட்சம் 100 கோடி வசூலையாவது கடந்தால் தான் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications