அரசியல் பண்ண அழைக்கும் ஆந்திரா: ஒத்துக் கொள்வாரா கார்த்தி?
ஹைதராபாத்: ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க கார்த்தியை அணுகியுள்ளார்களாம்.
மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜேசகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. மகி வி. ராகவ் இயக்கி வரும் இந்த படத்தில் ராஜசேகர் ரெட்டியாக மம்மூட்டி நடித்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியாக சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இந்த படத்தில் மம்மூட்டி ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
ராஜசேகர் ரெட்டியின் மகன் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க கார்த்தியிடம் கேட்டுள்ளார்களாம். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் கார்த்திக்கு நிறைய ரசிகர்கள் உள்ளதை மனதில் வைத்து அவரை அணுகியிருக்கக்கூடும்.
யாத்ரா படத்தில் நடிக்க கார்த்தி இன்னும் தனது ஒப்புதலை அளிக்கவில்லை. கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகி ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
டோலிவுட்டில் மேலும் ஒரு வாழ்க்கை வரலாற்று படம் உருவாகி வருகிறது. என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா தனது தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











