பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா?
Recommended Video

சென்னை: பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேச உள்ளாராம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசவிருக்கிறார்.

எதிர்ப்பு
பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி ஏதாவது கூற மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பட விழாவாக இருந்தாலும் ரஜினி அரசியல் பஞ்ச் பேசுவார், குறிப்பாக தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்ச்
2.0 பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி பஞ்ச் டயலாக் எல்லாம் விட்டார். 2.0 படம் ஏன் லேட்டுனு எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் லேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும். நான் படத்தை சொன்னேன் என்றார் ரஜினி. இது படத்திற்கு மட்டும் அல்ல அவரின் அரசியல் பிரவேசத்திற்கும் பொருந்தும். பொடி வைத்து பேசினாராம்.

அதிபுத்திசாலிகள்
புத்திசாலிகளுடன் பழக வேண்டும். அதிபுத்திசாலிகளுடன் பழக கூடாது, அவர்களின் ஆலோசனையை கேட்கக் கூடாது. அதிபுத்திசாலிகள் பல யோசனைகளை செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இருக்கும் இடத்தில் பல கதவுகள், ஜன்னல்கள் மூடி இருக்கும். ஆனால் நேரம் வரும்போது ஓடிவிடுவார்கள் ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காலா இசை வெளியீட்டு விழாவில் பேசினார் ரஜினி.

மரணம்
நான் இமயமலைக்கு செல்வதே கங்கையை பார்க்கத் தான். தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது என் கனவு. தென்னிந்திய நதிகளை மட்டும் இணைத்து விட்டால் மறுநாளே நான் கண்ணை மூடிவிட்டாலும் எனக்குப் பரவாயில்லை என்று காலா விழாவில் தெரிவித்தார் ரஜினி.

மகள்கள்
தன் மகள்களை விட வயதில் சிறியவர்களுடன் டூயட் பாடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக காலா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் ரஜினி. பேட்ட விழா மேடையிலாவது அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல்வாதி ஆவது எப்பொழுது என்பது குறித்து ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











