Suriya - STR: சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் சிம்பு?.. தரமான காம்பினேஷன் ரெடி ஆகிட்டு இருக்கு!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் என்றால் அது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகவுள்ள படமான கருப்பு படம் தான். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படி இருக்கையில் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 47 படத்தில் சிம்புவை நடிக்க வைக்க எல்லா முயற்சிகளை படக்குழு எடுத்து வருகிறதாம்.
சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சிம்புவும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சூர்யா படத்தை பொறுத்தவரையில் கிளைமாக்ஸில் தான் சிம்புவின் கேமியோ இருக்கும் என்றும், அதற்காக அவரிடம் இயக்குநர் ஜித்து மாதவன் பேசி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

டபுள் ஹீரோ: மேலும் படத்தின் சீக்குவல் எடுக்க உள்ளார்கள் என்பதால் அந்த படத்தில் சிம்பு மற்றும் சூர்யா என இருவரும் இணைந்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக நடிக்க தரமான கதையாகவும் அது உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் சூர்யா 47 படத்தில் நடிக்க சிம்பு சரி என்று சொல்லுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கான பதிலுக்கு பலரும் காத்துக் கொண்டு உள்ளார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அதே நேரத்தில் இருவரும் இணைந்து நடித்தால் இருவரது ரசிகர்களுக்குமே மிகவும் பிடிக்கும் என்றும், படத்தின் மார்க்கெட் என்பது பெரிய அளவில் உயரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வருவதைப் போல, வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் சூர்யாவும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அப்படி இருக்கையில் இருவரும் ஜித்து மாதவன் இயக்கத்தில் இணைந்து நடித்தால், அந்த படத்தின் புரோமோசன்கள் மற்றும் ரீலிஸின் போது படத்தின் மார்க்கெட்டிற்கும் உதவும் என்றும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் இதற்கு சிம்பு என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதில் தன் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











