தமிழ் நடிகர்களும் சம்பளத்தை குறைப்பார்களா?

By Staff

Vijay with Nayantara
மலையாள நடிகர், நடிகையர் தங்களது சம்பளத்தைக் குறைத்தது போல தமிழ் நடிகர், நடிகையரும் குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் சங்கத்தை வலியுறுத்தி வருகிறார்களாம்.

சமீபத்தில் மலையாளத் திரையுலகினர் சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க தயாரிப்பாளர் சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்தது.

அதன்படி பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கான பட்ஜெட்டை ரூ. 3 கோடியாக குறைத்துள்ளனர். மேலும், படப்பிடிப்புத் தளங்களில் செல்போனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த நடிகர் சங்க கூட்டத்தில், சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இந்த மாற்றங்கள் தற்போத தமிழ்த் திரையுலகிலும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென்னந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் இருப்பது தமிழிலும் தெலுங்கிலும்தான். எனவே தமிழ் நடிகர், நடிகைகளும் சம்பளத்தை வெகுவாக குறைக்க வேண்டும். அதை நாம் வலியுறுத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் சிலர், சங்கத் தலைமையை வலியுறுத்தி வருகிறார்களாம்.

இதுகுறித்து நடிகர் சங்கத்துடன் பேச வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். இதுகுறித்து சங்கத் தலைமை எப்படி அணுகலாம் என்று யோசித்து வருகிறதாம்.

மலையாள நடிகர், நடிகையரைப் போல தமிழிலும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வருவார்களா...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X