Theri Trailer: தெறிக்கவிடும் தெறி ரீ ரிலீஸ் டிரைலெர் வெளியானது.. மங்காத்தா டிரைலர் சாதனையை முறியடிக்குமா?
சென்னை: இந்த ஆண்டு தளபதி பொங்கலுக்கு காத்துக் கிடந்த ரசிகர்களுக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் கடைசியில் தலைவர் தம்பி தலைமையில் தான் பொங்கல் பண்டிகை ஏதோ சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் தெறி படமும் ரீ ரிலீஸ் ஆனால், முதலுக்கே மோசம் வரும் என சில தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், வேறு வழியில்லாமல் மங்காத்தா ரீ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள அதே நாளில் தெறி படமும் வெளியாக போகிறது.
சிவகார்த்திகேயன் vs விஜய் போட்டி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியாக விஜய் vs அஜித் போட்டியாகவே மாறியுள்ளது. மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸுக்காக அஜித் ரசிகர்கள் லாங் வெயிட்டிங்கில் இருந்த நிலையில், தெறி ரீ ரிலீஸ் எந்தளவுக்கு தாக்குப் பிடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கில்லி ரீ ரிலீஸ் அளவுக்கு குஷி மற்றும் சச்சின் ரீ ரிலீஸ் வசூலில் சாதனை படைக்காத நிலையில், தெறி அந்த சாதனையை படைக்குமா? என்பது டவுட்டு தான்.
கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்கள்: ஜன நாயகன் திரைப்படமாவது ஜனவரி 23ம் தேதி வெளியாகும் என விஜய் ரசிகர்கள் பொறுமையுடன் ஜனவரி 20ம் தேதி நடைபெற உள்ள வழக்குக்காக காத்திருந்த நிலையில், ஜன நாயகன் வெளியாகாது என்பதை உணர்த்தும் வகையில் தெறி ரீ ரிலீஸை பிளான் செய்துள்ளார் கலைப்புலி எஸ். தாணு. ஜன நாயகன் படத்துக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தெறி படத்துக்காக டிக்கெட் காசுகளை வீணடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மங்காத்தாவுடன் மல்லுக்கட்டு: தெறி ரீ ரிலீஸ் மூலம் மங்காத்தா ரீ ரிலீஸ் உடன் மல்லுக்கட்டுவது உறுதியாகி உள்ளது. அஜித் விளம்பரத்தில் நடித்தார் என அவரது ரசிகர்களே திட்டித் தீர்த்து வரும் நிலையில், தெறி ரீ ரிலீஸ் காரணமாக மீண்டும் அஜித் படத்துக்கு பலம் சேர்க்க அஜித் ரசிகர்கள் ஒன்று திரண்டு உள்ளனர். அஜித்துக்கு இப்போதைக்கு படம் இல்லாத நிலையில், மங்காத்தா ரீ ரிலீஸை தியேட்டரில் பெரிதாக கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைலர் சாதனையை முறியடிக்குமா?: ஜன நாயகன் டிரைலர் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு போட்டியாக பராசக்தி டிரைலர் அதிரடியாக 50 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்தது. மங்காத்தா ரீ ரிலீஸ் டிரைலர் மூன்று நாட்களில் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ் அள்ளியிருக்கிறது. தெறி ரீ ரிலீஸ் டிரைலர் ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் வியூஸ் கடந்துள்ளது. மங்காத்தா டிரைலர் சாதனையை முறியடிப்பது கஷ்டம் தான் என தெரிகிறது. விஜய் ரசிகர்கள் என்ன செய்யப் போறாங்கன்னு பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











