twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..!

    |

    Recommended Video

    அசுரன் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகும் சூரி | Soori with Vetrimaran

    சென்னை: அசுரன் படத்தை தொடர்ந்து வடசென்னை 2-ம் பாகத்தையோ அல்லது சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவதாகவோ இருந்த வெற்றிமாறன், தற்போது சூர்யாவை இயக்கவுள்ளார்.

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான காப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

    will vetrimaran change the face of surya

    வடசென்னை 2-ம் பாகத்தையோ அல்லது சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவதாகவோ இருந்த வெற்றிமாறனின் அடுத்த படத்தையும், அசுரன் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தயாரிக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யாவிடம் வெற்றிமாறன் கதை சொல்லியுள்ளார்.

    சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்ததாக கூறப்பட்ட நிலையில், சிவா ரஜினியின் 168-வது படத்தை இயக்குவதால், வெற்றி மாறனின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில், அவருக்கு பக்க பலமாக இருந்தவர்கள் செல்வராகவனும் வெற்றிமாறனும் தான். புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் தனுஷின் சிறந்த படங்களில் தவிர்க்க முடியாதவை.

    சமீபத்தில் வெளியான படங்கள் சரியாக போகாததால் தடுமாறி வரும் சூர்யா, செல்வராகவனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

    English summary
    Vetrimaran is going to direct Surya in his next movie and Surya is hoping VM for a makeover and comeback.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X