விஜய் இன்னொரு படம் நடிக்கிறாரா?.. சீனியர் இயக்குநர் கொடுத்த பதில்.. அது நடக்காதோ?

சென்னை: ஜனநாயகன் படம் லீக்கானதுதான் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திலும் ஹெட்லைனாக இருக்கிறது. இப்படி ஒரு விரும்பத்தகாத செயல் நடந்திருப்பதால் தயாரிப்பாளருக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக மீண்டும் ஒரு படத்தில் அதே நிறுவனத்துக்கு நடித்து கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்நிலையில் அதுகுறித்து இயக்குநரும், ஃபெப்சி சங்க தலைவருமான ஆர்.கே.செல்வமணி பேசியிருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே இணையத்தில் லீக்காகிவிட்டது. சென்சார் அதிகாரிகள் இன்னும் படம் பார்த்து சான்றிதழ் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படி இருக்கையில் ஒரு படம் கசிந்திருப்பது உண்மையில் கவலைக்குரிய விஷயம்தான். இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. ரஜினி, கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் முதல் ஜீவா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட ஜூனியர் ஹீரோக்கள்வரை அனைவருமே இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

Will Vijay Act Again After Jana Nayagan Leak R K Selvamani Reacts
Photo Credit:

அமைதி காக்கும் விஜய்: ஆனால் விஜய்யோ எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். அவர் தன் படத்துக்காக குரல் கொடுக்க வேண்டாம்; ஆனால் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றியாவது தெரிவித்திருக்கலாமே என்பது பலரது கருத்து. ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இது ஒருபக்கம் இருகக் யார்தான் இந்தப் படத்தை வெளியிட்டிருப்பார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஆறு பேரை காவல் துறையினர் கைதும் செய்தார்கள். அதேசமயம் கசிந்திருக்கும் படத்தில் எடிட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எடிட்டர் குற்றவாளியா?: எனவே எடிட்டர் தரப்பிலிருந்துதான் இது நடந்திருக்கும் என்று அமீர் உட்பட பலர் பேசினார்கள். அது மேற்கொண்டு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் எடிட்டருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என எடிட்டர்கள் சங்கம் விளக்கமளித்திருக்கிறது. மேலும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும் அதனையே குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் எடிட்டர் பிரதீப் ஆவார். இப்போதுதான் வளர்ந்துவருகிறார். அவர் இப்படி ஒரு செயலை செய்தால் தன்னுடைய வாழ்க்கையே போய்விடும் என்பது தெரியும்.

Also Read
ஜனநாயகன் எடிட்டர் குற்றவாளியா?.. அவர் மனைவி ஒரே அழுகை.. 8 மாத கர்ப்பம் வேறு.. ச்ச பாவம்
ஜனநாயகன் எடிட்டர் குற்றவாளியா?.. அவர் மனைவி ஒரே அழுகை.. 8 மாத கர்ப்பம் வேறு.. ச்ச பாவம்

எடிட்டராக இருக்க வாய்ப்பே இல்லை: எனவே அவராக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. அதேசமயம் கண்டிப்பாக படக்குழுவிலிருந்துதான் இது லீக்காகியிருக்க வேண்டும் என அடித்து கூறுகிறார்கள் ஒருதரப்பினர். ஆனால் அன்னபூர்ணா ஸ்டூடியோஸுக்கு சில திருத்தங்களுக்காக படம் அனுப்பப்பட்டது. அப்போது லீக்காகியிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இது ஒருபக்கம் இருக்க விஜய் பற்றி இன்னொரு தகவலும் வட்டமடித்தது.

மீண்டும் நடிக்கும் விஜய்?: அதன்படி, இந்தப் படம் லீக்காகிவிட்டதால் தயாரிப்பாளருக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக கேவிஎன் நிறுவனத்துக்கு இன்னொரு படத்தை நடித்து கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும்; அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் அல்லது அட்லீ இயக்குவார்கள் என்றும் கூறப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள், ஓஹோ ஜனநாயகன்தான் கடைசி படம் என்று சொன்னதெல்லாம் பொய்யா?.. அரசியலில் வெல்ல முடியாது என்று தெரிந்துவிட்டு மீண்டும் தாய் வீட்டுக்கே செல்கிறார் விஜய் என விமர்சித்தார்கள்.

ஆர்.கே.செல்வமணி ஓபன் டாக்: இந்நிலையில் ஜனநாயகன் லீக் தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை ஆர்.கே.செல்வமணி சந்தித்தபோது, 'பட தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் இன்னொரு படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வருகிறதே' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செல்வமணி, 'அப்படி எதுவும் செய்தி வரவில்லை. நீங்களாகத்தான் இப்படி ஒரு செய்தியை க்ரியேட் செய்கிறீர்கள்' என ஒரே போடாக போட்டார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X